என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

விகடன் டீம்

தென்னிந்திய சில்வர் ஸ்க்ரீன்களின் மின்மினிக் கண்மணிகள் தங்கள் சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்களில் அப்டேட் செய்யாத ஸ்டேட்டஸ் மெசேஜ் இங்கே...

 அனுஷ்கா

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

னுஷ்கா யோகா டீச்சர் என்பது நாடறிந்த செய்தி. ஆனால், அனுஷ்கா தனது நான்-ஸ்டாப் எனர்ஜிக்கு நம்புவது... யோகாவை அல்ல. வீட்டில் இருக்கும் விநாயகர் சிலையை! தினமும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது அந்த விநாயகர் சிலையை வணங்காமல் செல்ல மாட்டார் அனுஷ்கா. 'கமலின் அடுத்த பட ஹீரோயின் அனுஷ்கா தான்’ என்பது இப்போதைக்கு ஸ்கூப் எக்ஸ்க்ளூசிவ்!

ஸ்ருதிஹாசன்

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

மிழ் சினிமாவில் 'சைஸ் ஜீரோ’ ட்ரெண்ட் தொடங்கிவைக்கிறார் ஸ்ருதிஹாசன். ''என் பழைய ஜீன்ஸ்கள் எல்லாம் இப்ப எனக்கு ரொம்ப லூஸா இருக்கு. காபிகூடக் குடிக்கிறது இல்லை. ஒன்லி ஃப்ரூட் சாலட்!'' என்று சிரிக்கிறார்!

சமந்தா

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

நாக சைதன்யாவோடு காதல், ஷோரூம் திறப்பு விழா வில் அடிதடி என இப்போது ஆந்திர மீடியாவின் ஹாட் கேக்... சமந்தா! மகேஷ்பாபு வோடு 'டூக்குடு’, ராம் சரண் தேஜாவோடு 'ஈகா’ ஆகிய படங் களில் நடித்துக்கொண்டுஇருப்பவர், இந்த வருடக் கடைசியில் தமிழுக்கு விசிட் அடிக்கிறார். ''சென்னையை ரொம்ப மிஸ் பண்றேன். அடிக்கடி எத்திராஜ் காலேஜ் ஞாபகத்துல வந்துட்டே இருக்கு. கௌதம் படத்துக்காக சென்னை வரும்போது நிறைய ஊர் சுத்தணும்!'' என்று கண்கள் விரியக் காத்திருக்கிறார் சமந்தா!

தமன்னா

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

மன்னா இப்போ தமிழ் சினிமாவில் நாட் ரீச்சபிள்! ''தமன்னா தெலுங்கில் பிஸி. தமிழ் பத்தி யோசிக்கக்கூட நேரம் இல்லை. அந்த அளவுக்கு டைட் ஷெட்யூல்!'' என்கிறது தமன்னா தரப்பு. ஆனால், அவர்களோ தமன்னாவின் டேட்ஸ் சல்லிசாக இருக்கிறது என்று ஆஃபர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்!  

ஜெனிலியா

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

'' 'வேலாயுதம்’ படத்தில் நான் நியூஸ் ரிப்போர்ட்டர். என் தம்பி சிஎன்பிசி சேனலில் ரிபோர்ட்டரா இருக்கான். அவன்தான் இந்தப் படத்துல நடிக்க எனக்கு குரு. அப்பப்பா... மும்பையில் ஷூட்டிங்னா நானே கார் டிரைவ் பண்ணிட்டுப் போயிடுவேன். ஆனா, சென்னை டிராஃபிக்.... அப்பப்பா!'' என்று இமைகளைப் படபடக்க விடுகிறார்!

 அமலா பால்

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

நாக சைதன்யாவுடன் 'பெசவாடா ரவுடிலு’ படம் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார் அமலா பால். தெலுங்கு மாஸ்டர் ஒருவரை அருகிலேயே வைத்துக்கொண்டு மாட்லாட ஆரம்பித்துஇருக்கிறார். 'வேட்டை’க்கு அடுத்து ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தயாரிக்கும் 'காதலில் சொதப்பியது எப்படி?’ படத்தில் நடிக்க கமிட் ஆகி இருப்பவர், கால்ஷீட் சிக்கல் காரணமாக ஐஸ்வர்யா இயக்க... தனுஷ் நடிக்கும் '3’ படத்தில் இருந்து விலகிவிட்டார்!

த்ரிஷா

ஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

'''த்ரிஷாவுக்குப் படம் இல்லை’ என்று இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். ஆனால், நான் பெரிய நடிகர்களின் நான்கைந்து பட வாய்ப்பை மறுத்திருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. இப்போதுதான் தமிழ்ல ஒரு படம் நடிக்கப்போறேன்... ஹீரோ யார், என்ன படம்னு அந்தப் படத்தோட இயக்குநர் சீக்கிரமே அறிவிப்பார். அது வரை சஸ் பென்ஸ்!'' உதட்டின் மேல்விரல் வைத்து உஷ்ஷ்ஷ்ஷ் சொல்கிறார் த்ரிஷ்!