என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

விவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்!

இர.ப்ரீத்தி

##~##

'' 'வேட்டை’ படத்தில் நானும் அமலா பாலும் அக்கா தங்கச்சி. கலர் கலராத் தாவணி உடுத்திட்டு, ஸ்கூட்டி, புல்லட், மாட்டு வண்டினு செம ஜாலியா ரவுண்ட் அடிச்சுட்டே இருப்போம். எங்களைப் பார்க்குறப்பலாம் ஆர்யா, 'ச்சே! நெஜமாவே இப்படி ரெண்டு ஃபிகர் இருக்குற வீட்ல பொண்ணு கட்டணும். சூப்பரா இருக்கும்பா!’னு சொல்லிட்டே இருப்பார். 'அதுக்கென்ன... என் அக்கா ரெண்டு பேரும் மாடல்தான். எங்க வீட்டுக்கு வாங்க!’னு சொல்லி இருக்கேன். நான் எப்படா மும்பை போவேன்னு காத்துட்டு இருக்கார் ஆர்யா!''  -  பாவாடை, தாவணியில் இன்னும் பாலீஷாகச் சிரிக்கிறார் சமீரா ரெட்டி!

விவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்!

''என்னது... உங்க அக்காக்களும் மாடல்களா... அந்தக் கதை சொல்லுங்க?''

''ஆமா, மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டினு எனக்கு ரெண்டு அக்காக்கள். ரெண்டு பேருமே மாடல்கள்தான். சின்ன வயசுல இருந்தே அவங்களோட மாடலிங் ஷோ பார்த்துட்டே இருந்ததால், எனக்கு நடிப்பு ஆசையே இல்லை. ஆனா, 'சிட்டிசன்’ படத்தின் ஸ்க்ரீன் டெஸ்ட்டில் பாஸ் ஆனேன். அப்போதான் நான் ஸ்கூல் படிப்பு முடிச்சிருந்தேன். 'ரொம்ப சின்னப் பொண்ணு. இவளுக்கு விவரம் பத்தாது’னு அப்பா என்னை நடிக்கக் கூடாதுனு சொல்லிட்டார். இல்லைன்னா, அப்பவே நான் அஜீத்துக்கு ஜோடியா தமிழ்ல அறிமுகம் ஆகியிருப்பேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இப்பவும் நான் விவரம் தெரியாத சின்னப் பொண்ணுதான். இது அப்பாவுக்குத் தெரியாது!''

''ஆச்சர்யமா கௌதம் படம் இல்லாம வேற இயக்குநர் படத்திலும் நடிக்கிறீங்களே?''

''சென்னையில் கௌதம்தான் என்னோட ஃபர்ஸ்ட் அண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட். அவரை என் லைஃப்ல யாருடனும் ஒப்பிட முடியாது. அந்த அளவுக்கு 'வாரணம் ஆயிரம்’ எங்க ரெண்டு பேருக்கும்

விவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்!

இடையில் நல்ல ரிலேஷன்ஷிப்பை உண்டாக்கி இருக்கு. அதான் கௌதம் படம்னா, கண்ணை மூடிட்டு ஓ.கே. சொல்லிடுவேன். இப்போ லிங்குசாமி என்கிட்ட 'வேட்டை’ கதை சொன்னப்ப, ரொம்பவே இம்ப்ரெஸ் ஆனேன். இதுவரை இந்தி, தமிழ் எதிலும் நான் பண்ணாத கேரக்டர். முழுப் படமும் கிராமத்துப் பொண்ணா வர்றேன். தாவணி, தலை நிறையப் பூ, மஞ்சள் தேய்ச்ச முகம்னு ஸ்க்ரீன்ல என்னைப் பார்க்க எனக்கே அவ்வளவு பிடிக்குது. ஸ்பாட்லகூட என்னமோ சொன்னாங்களே... ஆங்... சரியான நாட்டுக் கட்டையாம் நான்!'' (உண்மை யிலேயே உங்களுக்கு விவரம் பத்தாதுதான் மேடம்!)

''தமிழ் ஹீரோக்களில் யார் யாரைப் பிடிக்கும் உங்களுக்கு?''

''யாரைத்தான் பிடிக்காது சொல்லுங்க... சூர்யா, ஆர்யா, மாதவன், விஷால்னு அது பெரிய லிஸ்ட். ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு வெரைட்டி. ஒரு தடவை ரஜினி சாரை ஏர்போர்ட்டில் பார்த்தேன். நம்மளா போய்ப் பேசலாமானு தயங்கி நின்னுட்டு இருந்தப்ப, அவரே என்னைப் பார்த்துச் சிரிச்சு பக்கத்துல வந்து, ' 'வாரணம் ஆயிரம்’ பார்த்தேன். ரொம்ப நல்லாப் பண்ணி இருந்தீங்க. இன்னும் நிறைய வித்தியாசமான படங்களில் நடிங்க. ஆல் தி பெஸ்ட்!’னு சொல்லிட்டு, விறுவிறுனு நடந்துபோயிட்டார். ஸோ ஸ்வீட் ஆஃப் ஹிம்!''

விவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்!

''சென்னையிலேயே செட்டில் ஆகப் போறீங்கனு சொன்னாங்க?''

''ஆமாங்க... எனக்கு மும்பையைவிட சென்னைதான் ரொம்பப் பிடிச்சிருக்கு. சின்ன லீவு கிடைச்சாலும், சென்னைக்குப் பறந்து வந்துடுறேன். இங்கே கிடைக்கும் சாம்பார் இட்லி, சட்னிலாம்.... ம்ம்ம்... யம்மி யம்மி! இப்போ இங்கே எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்துட்டாங்க. என் சென்னை புராணத்தைக் கேட்டுட்டு இங்கேயே ஒரு வீடு வாங்கிடலாம்கிற  ஐடியாவில் இருக்கார் அப்பா!''