இர.ப்ரீத்தி
##~## |
''ஹாய்ய்ய்ய்ய்... நல்லா இருக்கீங்களா? விஜய் சார் 'நண்பன்’ அப்டேட்ஸ் என்ன? அஜீத் சார் டிரைலரே செம ஹிட்டாமே! எப்போ ரிலீஸாம்? ஒண்ணுமே தெரியலைப்பா. ப்ச்... தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன்!''
''மேடம், தமிழ் சினிமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுது. போன வருஷம் முழுக்க எல்லா தியேட்டர்லயும் டூயட் பாடிட்டு இருந்தீங்க... இப்போ ஆளையே காணோம்?''
''அச்சோ... தெலுங்கில் பிஸி... பிஸி... பிஸி! ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, கரண்னு மூணு பேர் கூடவும் மாறி மாறி டூயட் பாடிட்டு இருக்கேன். தமிழ்ல 'பையா’, 'கண்டேன் காதலை’ படங்களுக்கு அப்புறம் ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்குற கேரக்டரே எனக்கு வரலையே!

ஹீரோயின் கேரக்டரும் ஸ்கோர் பண்ற மாதிரி படத்தில் நடிக்கணும்னா, அதுக்கு நான்தான் கதை எழுதணும்போல. சின்ன வயசுல மாதுரி தீட்சித் மேல எனக்கு எவ்வளவு க்ரேஸ் தெரியுமா? ஸ்கூல் படிக்கிறப்ப என் பாடி லாங்குவேஜ்லாம் அவங்க மாதிரியே இருக்கும். நடிகை ஆன பிறகு 'அவங்களை மாதிரி நடிக்கணும் தமன்னா’னு அடிக்கடி எனக்கு நானே சொல்லிட்டு இருப்பேன். 10 வருஷத் துக்கு முன்னாடி ஹீரோயின் களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போ இல்லவே இல்லை!''

''ஹீரோயின்களுக்கான ஸ்கோப் பத்திக் கவலைப்படுறீங்க. ஆனா, சினிமா ஹீரோயின்களுக்குள் எந்த அளவுக்கு நட்பு இருக்கு. ஒரே படத்துல அறிமுகமான இலியானாவுக்கும் உங்களுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கா?''
''நாங்க திக் ஃப்ரெண்ட்ஸ் இல்லைன்னாலும், எங்களுக்குள் சண்டை எதுவும் கிடையாது. ரிலாக்ஸா சந்திச்சு அரட்டை அடிக்க ரெண்டு பேருக்குமே நேரம் இல்லைங்கிறதுதான் உண்மை. எப்பவாவது ஃபங்ஷன்ல பார்க்குறப்ப சும்மா 'ஹாய்... பை’யோட முடிச்சுக் குற அளவுக்குத்தான் இப்போ எங்களுக்குள் ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு. ஆனா பூனம் பஜ்வா, ஹன்சிகா, காஜல், ஷமந்தானு என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஒரு பெரிய கேங்க்கே இருக்கு. எல்லாருமே செம சேட்டைக்காரிங்க. சென்னை யில் பார்ட்டி, ஹோட்டல், பீச்னு பயங்கரமா ஆட்டம் போடுவோம். ஆனா, வீட்டுக்குப் போயிட்டா தமன்னா குட் கேர்ள்!''
''தமன்னாவின் காதல்கள்?''
''இந்தக் கேள்வியை நீங்க விடாத வரைக்கும் அந்தப் பதிலையும் நான் விட மாட்டேன். நோட் பண்ணிக்கோங்க... அச்சோ... காதலிக்கிற அளவுக்கு எனக்கு வயசாகலைப்பா. நான் ரொம்ப சின்னப் பொண்ணுப்பா! உடனே, என்ன வயசுன்னு அடுத்து கேள்வி கேட்காதீங்க. சொல்ல மாட்டேனே!''
''சமூக அக்கறையோடு ஒரு கேள்வி... அண்ணா ஹஜாரே எதுக்காகப் போராடிட்டு இருக்கார்னு தெரியுமா? அவர் விஷயத்தில் உங்க ஸ்டாண்ட் என்ன?''

''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க! ஒரு தனி மனுஷனா இந்தியா முழுக்க எல்லோர் மனசுலயும் இவ்வளவு வைப்ரேஷன் உண்டாக் குன அண்ணா தாத்தாவை எனக்குத் தெரியாம இருக்குமா? என் அண்ணன் ஆனந்த் மெடிக்கல் ஸ்டூடன்ட். சரியான படிப்ஸ் பார்ட்டி. ஆனா, அவனையே ஹஜாரே பத்தி தினமும் அப்டேட் பண்ணிட்டு ஃபாலோ பண்ண வெச்சிருக்கு அண்ணா ஃபீவர். என் ஃபுல் சப்போர்ட் அண்ணா ஹஜாரேவுக்குத்தான்!''