சினிமா
Published:Updated:

டென்ஷன் ராஜேந்திர பாலாஜியும் மெசேஜ் சொன்ன மிர்ச்சி சிவாவும்...

‘மிர்ச்சி’ சிவா.
பிரீமியம் ஸ்டோரி
News
‘மிர்ச்சி’ சிவா.

கிரிக்கெட்டு பார்ப்பேன். ஆனா,ஸ்பான்ஸர் யார்னு தெரியலயே!

“லாக்டெளனால வீட்டுக்குள்ளேயேதான் இருக்கேன். எங்கேயும் போறது இல்ல. ‘கேள்வி கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்’ தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி ஆயத்தமாகிறார் தமிழறிஞர் சாலமன் பாப்பையா.

“ ‘மதுரையைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும்’ என்று சொன்ன அமைச்சர் யார்?”

“இரண்டாவது தலைநகரமா மதுரையை கொண்டு வரலாம்னு சொல்லியிருந்தா, அது செல்லூர் ராஜூவாதான் இருக்கும். அக்கம் பக்கத்துல இப்படிதான் பேசுகிறாங்க...”

டென்ஷன் ராஜேந்திர பாலாஜியும் மெசேஜ் சொன்ன மிர்ச்சி சிவாவும்...

“ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசியின் பெயர் என்ன?”

“எல்லா நாட்டுகாரங்களும் தேடிக்கிட்டுதான் இருக்காங்க. ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடிச்சு இருக்காங்கனு கேள்விப்பட்டேன். ஆனா, அந்த மருந்து தெளிவா இல்லனு சொன்னாங்க. என்ன பேர்னு தெரியலயே...?”

“கண்ணில் கத்தி குத்தியதாக ட்வீட் போட்டு பரபரப்பைக் கிளப்பிய நடிகை யார்?”

“தெரியுமே, குஷ்பூ. ஆனா, ட்வீட்டர் பார்த்து தெரிஞ்சுக்கல. பேப்பர்ல போட்டிருந்தாங்க. பார்த்தேன்.”

“ஐ.பி.எல் ஸ்பான்ஸர் யார்?”

“கிரிக்கெட்டு பார்ப்பேன். ஆனா,ஸ்பான்ஸர் யார்னு தெரியலயே!

“மோடி இந்திய - சீன எல்லையில் சொன்ன திருக்குறள் என்ன?”

“ஆ... நியூஸ் வந்தப்போ பார்த்தேன். என்ன திருக்குறள்னு ஞாபகமில்ல. வயசாயிருச்சுல்லே...” சிரிக்கிறார்.

சிரித்தபடி பதில் சொல்லத் தயாரானார்‘மிர்ச்சி’ சிவா.

“ ‘மதுரையைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும்’ என்று சொன்ன அமைச்சர் யார்?”

‘‘அந்த அமைச்சர் சொன்னதை நியூஸ்லதானே சொல்லியிருப்பாங்க. நான் கொரோனா ஆரம்பிச்சதுல இருந்து நியூஸ் பார்க்கிறதையே விட்டுட்டேன் ப்ரோ. யாரு சொன்னாங்கிறது முக்கியமில்லே... ஆனா, மதுரையை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்குறதுக்கு முன்னால, உலகத்துக்கே தலைநகராக மாத்தணும்.”

டென்ஷன் ராஜேந்திர பாலாஜியும் மெசேஜ் சொன்ன மிர்ச்சி சிவாவும்...

“ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசியின் பெயர் என்ன?”

‘‘ ‘ஸ்புட்னிக்’ (பளீர் என பதில் வருகிறது). ரொம்ப கொடூரமா போயிட்டு இருக்கிற கொரோனாவுக்கு எப்போ மருந்து கண்டுப்பிடிப்பாங்கனு காத்திட்டு இருந்தனால, இந்த செய்தியை மட்டும் ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். ரஷ்யா முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர்தான், ‘ஸ்புட்னிக்’. எப்படி... நீங்க ஒரு கேள்வி கேட்டதுக்கு நான் ரெண்டு பதில் சொல்லியிருக்கேன். மார்க்கை கொஞ்சம் பாத்துப்போடுங்க’’

“கண்ணில் கத்தி குத்தியதாக ட்வீட் போட்டு பரபரப்பைக் கிளப்பிய நடிகை யார்?”

‘‘ ‘அச்சச்சோ... யாரு ப்ரோ அவங்க. இப்போ நல்லாயிருக்காங்களா...’ என பதைபதைப்போடு பதிலை நம்மிடம் கேட்டார். பதிலைச் சொன்னதும், ‘’கேட்கிறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு ப்ரோ. இந்தச் செய்தி மூலம் நான் மக்களுக்கு சொல்ல வர அட்வைஸ் என்னான்னா, இனிமேல் கத்தியை கண்ணு வரைக்கும் கொண்டு போகாதீங்க; காய்கறியோட நிப்பாட்டிக்கோங்க, ப்ளீஸ்.’’

“ஐ.பி.எல் ஸ்பான்ஸர் யார்?”

‘‘இதுக்கு எனக்கு பதில் தெரியும்; கொஞ்சம் டைம் கொடுக்குறீங்களா யோசிச்சு சொல்றேன்’ என்றவர், ‘ஞாபகம் வர மாட்டிக்கிது ப்ரோ’ என சரண்டரானார். “சைனீஷ் கம்பெனி மட்டும் ஸ்பான்ஸரா இருக்கக்கூடாதுனு பல பேர் சொல்லிட்டு இருந்தாங்க; அவங்க நினைச்ச மாதிரியே நடந்திருக்கு’’

“மோடி இந்திய - சீன எல்லையில் சொன்ன திருக்குறள் என்ன?”

‘‘நான்தான் நியூஸே பார்க்கிறது இல்லைனு சொன்னேனே ப்ரோ. அவர் திருக்குறள் சொன்னதையும் பாக்கலே. ஆனா, அவர் திருக்குறளைச் சொல்லியிருக்கிறார்னு நினைக்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுனா, உலகத்தில் இருக்கிற எல்லாப் பிரச்னைகளுக்கும் திருக்குறளில் தீர்வு இருக்கு. அதனால, எல்லாரும் திருக்குறளை படிங்க.’’

“நான் இப்போ அரசியல்லயே இல்ல. என்கிட்ட கேள்வி கேட்குறீங்களே... கேளுங்க... கேளுங்க... தெரிஞ்சவரைக்கும் சொல்றேன் “ என்று தயாராகிறார் தீபா.

“மதுரையைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும்’ என்று சொன்ன அமைச்சர் யார்?”

“ஆர்.வி.உதயகுமார்னு நினைக்கிறேன். அரசியல் சார்ந்த செய்திகளை எப்போவும் நான் பாலோ பண்ணிட்டுதான் இருக்கேன்.”

டென்ஷன் ராஜேந்திர பாலாஜியும் மெசேஜ் சொன்ன மிர்ச்சி சிவாவும்...

“ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசியின் பெயர் என்ன?”

“பேர் தெரியலயே.. ஆனா, ரஷ்யாவும் இந்த முயற்சியில இருக்குனு தெரியும். இரண்டாம் கட்ட ஆராய்ச்சில இருந்ததா சொன்னாங்க. அதுக்கு அப்புறம் இதை பாலோ பண்ணல.”

“கண்ணில் கத்தி குத்தியதாக ட்வீட் போட்டு பரபரப்பைக் கிளப்பிய நடிகை யார்?”

“நடிகர், நடிகைகள் பேர்கூட பெருசா தெரியாது. அதனால, யார் இப்படி ட்வீட் போட்டாங்கனு தெரியல. பெரிய படங்கள் பற்றி அறிவிப்பு வந்தா கவனிப்பேன். அதுக்குமேல சினிமாவோட டச் இல்லை. சரி, யார் அந்த நடிகைன்னு சொல்லுங் களேன்...” என்றவர் “குஷ்பூ” என்று நாம் பதில் சொன்னவுடனே, ‘ஓ.. அவங்களை தெரியும். பட், ட்விட்டர்ல பாலோ பண்ணல.’’

“ஐ.பி.எல் ஸ்பான்ஸர் யார்?”

“எந்த டீம்க்கு” என்றவர், “யாரெல்லாம் விளையாடுறாங்கனு தெரியும். ஆனா, மொத்தமா யார் ஸ்பான்ஸர் பண்றாங்கனு தெரியாது.’’

“மோடி இந்திய - சீன எல்லையில் சொன்ன திருக்குறள் என்ன?”

“மோடி ஏதோ சொன்னார்னு ஞாபகமிருக்கு. என்ன திருக்குறள்னு தெரியலயே என்றவர்... “தப்பா நினைச்சுக்காதீங்க.. ப்ளஸ் டூ வரைக்கும் இந்தி, பிரெஞ்ச் மொழியை பாடமா எடுத்து படிச்சேன். தமிழை தனியா டீச்சர் வெச்சுதான் கத்துக்கிட்டேன். திருக்குறள் மாதிரியான விஷயங்கள் படிக்கணும்னு ஆசை. இன்னும் அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல...” என்கிறார்.

“ராஜபாளையம் கோயில்ல கும்பாபிஷேகம் நடக்குது... போயிட்டிருக்கேன்... கேளுங்க... பயணத்திலேயே பதிலை சொல்லிர்றேன்” என்றபடி கேள்விகளை எதிர்கொண்டார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

“’மதுரையைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும்’ என்று சொன்ன அமைச்சர் யார்?”

கடுப்பாகிவிட்டார்... “என்ன, கேள்வி இது. சின்ன பிள்ளைக்கிட்ட கேட்குற கேள்வியை என்கிட்ட கேட்குறீங்க. அரசியல்ல வேற ஏதாவது கேள்வியிருந்தா கேளுங்க... இது பனைமரத்தை பார்த்து, என்ன மரம்னு கேட்குற மாதிரியிருக்கு. என்னை தாழ்த்தி, அவரை உயர்த்திப் பிடிக்கிறதுக்காக இந்த கேள்வி கேட்குறீங்களா..?” என்றவரை சமாதானப்படுத்தி அடுத்த கேள்வியை கேட்டோம்.

டென்ஷன் ராஜேந்திர பாலாஜியும் மெசேஜ் சொன்ன மிர்ச்சி சிவாவும்...

“ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசியின் பெயர் என்ன?”

“அங்கீகாரமாகி மார்க்கெட்டுக்கு வர்றப்போ இந்திய மருத்துவகுழு சோதித்து சரினு ஒத்துக்கிட்ட பின்னாடிதான் இந்த தடுப்பூசியைப் பத்திப் பேசணும். அதுக்கு முன்னாடி இந்த மருந்து பத்திப் பேசுறது நியாயம் இல்ல.” (பதில் தெரியலேங்கிறதை என்னா நாசூக்கா சொல்றாரு)

“கண்ணில் கத்தி குத்தியதாக ட்வீட் போட்டு பரபரப்பைக் கிளப்பிய நடிகை யார்?”

“தெரியுமே, குஷ்பு. மனசுல பட்டதை அப்படியே பேசக்கூடியவங்க. திமுகவுல இருக்குறப்பவும் இப்படித்தான் மனசுல பட்ட கருத்துகளை சொல்லிட்டு இருந்தாங்க. காங்கிரஸ்க்கு போனபிறகும்கூட மத்திய அரசை பிரச்னைக்கேத்த மாதிரி விமர்ச்சிக்கிறாங்க.”

“ஐ.பி.எல் ஸ்பான்ஸர் யார்?”

“இப்போ இருக்குற சூழல்ல ஐ.பி.எல் தேவையா... பொழுதுபோக்குல எல்லாம் எனக்கு நாட்டமில்ல. அதனால, இதைப் பற்றி தெரிஞ்சுக்க விரும்பல. ஸ்பான்ஸர் யார்னு இன்னும் முடிவாகல.”

“மோடி இந்திய - சீன எல்லையில் சொன்ன திருக்குறள் என்ன?”

“லடாக் போயிருந்தப்போ திருக்குறள் சொன்னார்னு கேள்விப்பட்டேன். ஆனா, என்னனு ஞாபகமில்ல. தமிழ் புலவருடைய குறளை ராணுவ வீரர்கள் மத்தியில பேசுனது தமிழர்களுக்கு பெருமையான விஷயம். முப்பாலுக்கும் குறள் எழுதிய திருவள்ளுவரை பாராட்டியே ஆகணும். அவ்வளவுதானா... அரசியல் கேள்விகளை எதிர்பார்த்தேன்... இப்பிடி பேட்டியை முடிச்சுட்டீங்களேப்பா.”