
கேள்வியா... எந்தக் கேள்வி வேணும்னாலும் கேளுங்க ப்ரோ... நான் தயார்” என்றபடி ஆயத்தமானார், நடிகர் ஜான் விஜய்.
“ஐடியா ரொம்ப நல்லாருக்கே பிரதர்... ஆனா நான் இப்போ மலைமேல ஷூட்டிங்ல இருக்கேன். டவர் கொஞ்சம் பிரச்னையா இருக்கும்... அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றபடி கேள்விகளை எதிர்கொள்கிறார், நடிகர் பாலசரவணன்.
“நீங்க நினைக்கிற அளவுக்கு நான் அறிவாளி கிடையாது. இருந்தாலும் கேள்விகளைக் கேளுங்க. பதில் சொல்ல முயற்சி பண்றேன்’’ எனத் தயாரானார், நடிகை வினோதினி.
“கேள்வியா... எந்தக் கேள்வி வேணும்னாலும் கேளுங்க ப்ரோ... நான் தயார்” என்றபடி ஆயத்தமானார், நடிகர் ஜான் விஜய்.
“நடப்புச் செய்திகள்தானே, கேளுங்க. நான் ரெடி. தினமும் எல்லாப் பத்திரிகைகளும் படிப்பேன். சரியான பதிலைச் சொல்லுவேன்னு நம்புறேன்” என ஆரம்பித்தார், கவிஞர் சல்மா.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
சரியான பதில்: அம்பேத்கர்
பால சரவணன்: “அம்பேத்கர்”
வினோதினி: “அம்பேத்கர்.”
ஜான் விஜய்: “காலங்காத்தால தூங்கிட்டு இருக்குற என்கிட்ட இப்படி ஜி.கே கேள்வி கேட்டா எப்படி... எனக்கு யார்னு தெரியலயே.”
சல்மா: “டாக்டர் அம்பேத்கர்.”

கங்கனா ரணாவத்தின் சொந்த மாநிலம் எது?
சரியான பதில்: இமாச்சலப்பிரதேசம்
பால சரவணன்: “சமீபத்தில் அவங்க போலீஸ் பாதுகாப்போடு நடந்து வந்த வீடியோவைப் பார்த்தபோதான், அவங்க இமாச்சலப் பிரதேசம்னு எனக்குத் தெரிஞ்சது.”
வினோதினி: “இமாச்சல். அவங்கதான் தன்னைத்தானே ‘இமாச்சலின் மகள்’னு விளம்பரப்படுத்திட்டு இருங்காங்களே.”
ஜான் விஜய்: “இவங்க நல்ல நடிகை. டெல்லியைச் சேர்ந்தவங்கன்னு என் நண்பன் சொல்லிக் கேள்விப்பட்ட ஞாபகம்.”
சல்மா: “இமாச்சலப்பிரதேசம்.”

“நான் போன் செய்தால் சீமான் எடுப்பதேயில்லை” என்று குற்றம் சாட்டிய நாம் தமிழர் கட்சிக்காரரின் பெயர் என்ன?
சரியான பதில்: கல்யாண சுந்தரம்
பால சரவணன்: “கல்யாண சுந்தரம். அவங்களுக்குள்ள பிரச்னை வந்ததுல இருந்தே இந்த விஷயத்தை பாலோ பண்ணிட்டு இருக்கேன்.’’
வினோதினி: “கடந்த ஒன்றரை வருஷமா சீமான் சார் இயக்குற படத்தில் நடிச்சிட்டிருக்கேன். ஆனால், இந்தப் பிரச்னை எனக்குத் தெரியாமல் போச்சே.”
ஜான் விஜய்: “சீமானுக்குப் பிடிக்காத யாரோ போன் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்குறேன்.”
சல்மா: “கல்யாண சுந்தரம்.”

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் மூல நாவலான வாடிவாசலை எழுதியவர் யார்?
சரியான பதில்: சி.சு.செல்லப்பா
பால சரவணன்: “சி.சு.செல்லப்பா ஐயா. ‘வாடிவாசல்’ நாவலைப் படமாக எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான், இந்த நாவலை யார் எழுதியிருக்காங்கன்னு தேடிப்பார்த்தேன்.”
வினோதினி: “இந்த நாவல் மாடுபிடி வீரர்களைப் பற்றியதுன்னு எனக்குத் தெரியும். ஆனால், எழுத்தாளர் யார்னு தெரியலையே.”
ஜான் விஜய்: “ஸ்கூல் படிக்கும்போதே படிக்க மாட்டேன். அம்மாதான் புத்தகத்துல இருக்குறத படிச்சுக் காட்டுவாங்க. இதை அப்படியே உள்வாங்கிட்டு எக்ஸாம் எழுதுவேன். இப்படியிருக்குற நான் ‘வாடிவாசல்’ புத்தகத்தைப் படிக்கல. அதனால யார் எழுதினாங்கன்னும் தெரியல.”
சல்மா: ”சி.சு.செல்லப்பா.”
எந்தக் கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்?
சரியான பதில்: வீனஸ்
பால சரவணன்: “வெள்ளிதானே பிரதர்.”
வினோதினி: “வீனஸ். உயிரினங்களில் இருந்து வெளியாகிற பாஸ்பைன் கேஸ் அந்தக் கோளில் இருக்கிறதனால, அதில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லி யிருக்காங்க.’’
ஜான் விஜய்: “கோள்கள் பற்றி ஆராய்ச்சி செய்றது எனக்குப் பிடிக்கும். நிலாவுல வாழலாம்னு சொல்லியிருக்காங்க.”
சல்மா: “செவ்வாய்னு நினைக்குறேன்.”