
News
நாளைய முதல்வர்கள் சங்கம்

"நம்ம நடிகர் சங்கத்துக்கு என்ன பேரு வைக்கலாம்?"
"நாளைய முதல்வர்கள் சங்கம்."
- மாணிக்கம்

“அவரை ஏன் தலைவரே கட்சியை விட்டு நீக்கறீங்க?”
“கட்சியில இருக்க நாள் வாடகை பேசறார்.”
- அம்பை தேவா

“அரசியலுக்கும், சினிமாவுக்கும் என்னய்யா வித்தியாசம்..?”
“சினிமாக்காரங்க ஆடியோ ரிலீஸ் செஞ்சா அது புதுப்படம். அரசியல்வாதிங்க ஆடியோ வெளியிட்டா புதுக்கட்சிக்குப் போறாங்கன்னு அர்த்தம்.”
- பழ.அசோக்குமார்

"டாக்டர், என் ஆபரேஷனை ஏன் தள்ளி வெச்சிட்டீங்க?’’
"இன்னும் உங்க வியாதி சம்பந்தமான போர்ஷனை நான் படிக்கல. அது படிச்சதும் ஆபரேஷன் வெச்சுக்கலாம்னுதான்!”
- லட்சுமி மணிவண்ணன்