சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

“டாக்டர்... ஆபரேஷனுக்குப் பிறகு பால் சாப்பிடலாமா?!”

“டோன்ட் ஒர்ரி... சொந்தக்காரங்களே ஊத்திடுவாங்க..!”

- கோவை.நா.கி.பிரசாத்

“இவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டுதான் ஆகணுமா டாக்டர்..?’’

“தேவையில்லைதான். வேணும்னா எங்க மெடிக்கல்லயே திருப்பிக் குடுத்துடுங்க. பாதி ரேட்டுக்கு எடுத்துக்குவாங்க!’’

ஜோக்ஸ் - 1

- ஜெ. மாணிக்கவாசகம்

“படம் முடியும்போது, வில்லன் இதுக்குப்பிறகு ஒரு தெலுங்குப் படத்துல நடிக்கிறாருன்னு டைட்டில்ல போடுறீங்களே, ஏன்..?”

“வில்லன் கடைசில என்ன ஆனான்னு காட்டவே இல்லைன்னு ஜனங்க சொல்லக் கூடாது பாருங்க...”

ஜோக்ஸ் - 1

- யுவகிருஷ்ணா

"அணையிலே இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விட வந்த தலைவர் டென்ஷனா இருக்காரே, எதுக்கு..?"

" `கட்சியின் உபரி நீரே... வருக வருக!’ன்னு ப்ளக்ஸ் வெச்சிருந்தாங்களாம்..!"

ஜோக்ஸ் - 1

- வேம்பார் மு.க.இப்ராஹிம்