
News
“போர் தொடங்கும் முன் போர்க்களத்தை இருவர் பார்வையிடுகிறார்களே... எதற்காக?’’
“பிட்ச் ரிப்போர்ட் கொடுப்பதற்காகவாம்!’’
- கு.வைரச்சந்திரன்
“பயப்படும்படியா எதுவுமில்லையே சிஸ்டர்?!’’
“ஆஸ்பத்திரி பில் இருக்கே!’’

- எஸ்.முகம்மது யூசுப்.
“நம்ம மன்னருக்கு ‘ரூட்டு தல’ பட்டம் எப்படிக் கிடைச்சது?”
“புதுப் புது ரூட் கண்டுபிடிச்சு போர்க்களத்துலேருந்து தப்பிச்சு ஓடிவந்திடுறார்... அதைப் பாராட்டிதான் கொடுத்தாங்க.”

- திருமாளம் எஸ். பழனிவேல்
“ஆபரேஷனுக்கு எவ்வளோ செலவாகும்னு கேட்டா, டாக்டர் என்ன பேங்க் வெப்சைட் போறாரு?”
“EMI எவ்வளோன்னு பார்க்குறார்!”

- தஞ்சை சுபா