
News
``அதென்ன... அந்தாளு 1028 ரூபாய் மொய் எழுதிட்டுப் போறாரு?’’
``1000 ரூபாய் மொய்யாம். மீதி 28 ரூபாய் ஜி.எஸ்.டியாம்.’’
- ரஹீம் கஸ்ஸாலி
“எம்.எல்.ஏ-வுக்கும், சாதாரண வாக்காளருக்கும் என்ன வித்தியாசம் தலைவரே..?”
“யோவ்... இருநூறு ரூபாய்க்கு ஓட்டு போட்டா சாதாரணமானவன். இருநூறு கோடிக்கு ஓட்டு போட்டா எம்.எல்.ஏ!”

- பழ.அசோக்குமார்
“தலைவரே! நாலு எம்.எல்.ஏக்களை வெச்சுக்கிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கேட்கறீங்களே! பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீங்க!”
“பெரும்பான்மை நிரூபிக்க, 5 வருசம் கால அவகாசம் கேட்போம்!”

- கி.ரவிக்குமார்
"வீட்டில ஒண்ணுமில்ல...
சமைக்கலை... கெளம்புப்பா..."
"அதனால என்ன தாயீ...! அதான் உங்க போன்ல ஸ்விக்கியும், ஸொமோட்டோவும் இருக்கே... அதுல ஆர்டர் பண்ணுங்க நான் வெயிட் பண்றேன்..."

- பழ.அசோக்குமார்