பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

தூது வந்திருக்கும் எதிரி நாட்டுப் புறா இன்றோடு ஓய்வு பெறுதுன்னு நினைக்கிறேன் மன்னா!

ஜோக்ஸ் - 5

``எனக்கு இலவசமே பிடிக்காதுங்க!’’

``அதுக்காக, குற்றப்பத்திரிகையைக்கூட சந்தா கட்டித்தான் வாங்குவேன்னு சொல்றது நல்லால்லே!’’

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ் - 5

``தலைவர் எதுக்கு ஒரே நேரத்துல பல ஊர்ல கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றாரு?’’

``எங்கே கூட்டம் வருதோ அங்கே பேசலாம்னுதான்!’’

- அஜித்

ஜோக்ஸ் - 5

``தலைவருக்கு தைரியம் ஜாஸ்தியா?’’

``வரி கட்டாம கஷ்டப்பட்டுச் சேர்த்து வெச்ச சொத்தைப் பிடிங்கிட்டுப் போயிட்டாங்கன்னு வருமான வரித்துறை மேலயே கேஸ் போட்டிருக்காரே!’’

- அஜித்

ஜோக்ஸ் - 5

``தூது வந்திருக்கும் எதிரி நாட்டுப் புறா இன்றோடு ஓய்வு பெறுதுன்னு நினைக்கிறேன் மன்னா!’’

``எப்படிச் சொல்கிறீர்?’’

``தகவல் ஓலையோடு `65’ மசாலாவையும் அனுப்பியுள்ளான் எதிரி மன்னன்!’’

- அதிரை யூசுப்