
News
“போருக்குப் போன மன்னர் ஏன் திரும்பி வர்றாரு..?”
“ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுன சாப்பாடு அரண்மனைக்கு வந்திருக்குன்னு ஸ்விக்கி டெலிவரி பாய், மன்னருக்கு போன் பண்ணியிருக்கான்... அதான்.”

- மலர்சூர்யா
"உங்க பேங்குல எந்த அக்கவுன்ட்லே சார் அதிகமான டெபாசிட் இருக்கு..?"
"ஏன் சார் கேட்குறீங்க...?"
"என்னோட அக்கவுன்ட்டையும் அப்படியே அந்த அக்கவுன்ட்டோட இணைச்சிடத்தான்..!"

- பழ.அசோக்குமார்
"சாதாரண ஜுரத்துக்கு எதுக்கு டாக்டர் கையை எக்ஸ் ரே எடுக்கச் சொல்றீங்க...?"
"ஊசி இறங்கும் அளவுக்கு சதை அமைப்பு இருக்கான்னு பார்க்க வேணாமா..."

- அதிரை யூசுப்
"ஆபரேஷன் முடிஞ்சுடுச்சுன்னு எங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்?"
"நான் கண்ணாடியைக் கழட்டி சாரி சொல்லுவேன்!"

- அஜித்