
News
"வரலாற்றில் என் பெயர் இடம்பெறும்போது..."
"வரலாற்றைப் படிக்கிறதையே நிப்பாட்டிடுவாங்க தலைவரே!"

- அஜித்
"எதிர்க்கட்சிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நாட்டின் பொருளாதாரத்தையே ஒழித்த எங்கள் தலைவர், பிளாஸ்டிக்கையா ஒழிக்க மாட்டார்?"

- கி.ரவிக்குமார்
“சர்வர், அந்த ஆள்கிட்ட என்ன சொன்னே, சாப்பிடாமல் போறாரே?”
“சாப்பாடு எப்படி இருக்கும்னு கேட்டார். உங்க மனைவி கையால சமைச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன். உடனே எழுந்து போயிட்டார் முதலாளி!”

- எஸ்.முகம்மது யூசுப்
"உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது மன்னா!'’
"எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே!"
"உங்கள் ஒருவர் ஓட்டத்தால், ஒரு பெரும் படையே பாதிப்பில்லாமல் இருக்கிறதே!"

- கி.ரவிக்குமார்