பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

"தலைவர் கர்நாடகா சிறையிலிருந்து திஹார் சிறைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்காராம்." "எதுக்கு?''

"கன்னடம் முழுசா கத்துக்கிட்டாராம். அடுத்து இந்தி கத்துக்க ஆசைப்படறாராம்."

ஜோக்ஸ் - 3

- வி. ரேவதி, தஞ்சை

"பத்துப் பேரா சேர்ந்து அவரைத் தாக்கினது உங்க கட்சி ஆளுங்க இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க?"

"எங்க கட்சியில ஏது பத்துப் பேர்?"

ஜோக்ஸ் - 3

- எஸ்.எஸ்.பூங்கதிர்

"மன்னர் ரொம்ப ட்ரெண்டியா, எப்படிச் சொல்றே?"

"புலவரிடம் சன்மானத்துக்குப் பதில் ஸ்க்ராட்ச் கார்டு தருகிறாரே?"

ஜோக்ஸ் - 3

- தஞ்சை சுபா

“தலைவர் வாட்ஸ் அப்பையே இப்பதான்

பார்க்கிறாரு போல...”

“எப்படிச் சொல்றே?”

“நேத்து அனுப்பின மெசேஜ் பார்த்துட்டு புளூ கலா்ல டபுள் டிக்கு போட்டிருக்கே... ஆனா மார்க் ஏன் போடலேன்னு கேட்கிறாருன்னா பாரேன்...”

ஜோக்ஸ் - 3

- மலர்சூர்யா