பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

Jokes
பிரீமியம் ஸ்டோரி
News
Jokes

"சி.பி.ஐ அதிகாரி ரொம்பக் கோபமா இருக்கிற போட்டோவைத் தலைவருக்கு அனுப்பி வெச்சிருக்காங்களே?"

"விசாரணையோட ஃபர்ஸ்ட் லுக்காம்!"

ஜோக்ஸ் - 4

- அஜித்

"எதிரி மன்னன் போருக்கு வருவதை எதற்கு வீடியோ எடுக்கிறாய் தளபதியே?"

"அவன் வீரத்தோடு நடந்து வரும் வீடியோவுக்கு உங்களின் ரியாக்ஷனைப் படம் பிடித்து யூடியூபில் போட்டால் நானும் சிறிது வருமானம் பார்ப்பேன் மன்னா!"

ஜோக்ஸ் - 4

- அஜித்

“அந்த நகைக்கடையில திருடும்போது நீ ஏன் செல்ஃபி எடுத்தே?”

“மற்ற நகைக்கடையில திருட்டுப் போனதையும் சேர்த்து என்மேல கேஸ் போட்டுடக்கூடாதேன்னுதான்!”

ஜோக்ஸ் - 4

- எஸ் முகம்மது யூசுப்

"என்ன சார், ஓய்வு பெற்றதும் என்ன செய்யப் போறீங்க!'’

"ஏதாவது ஒரு கட்சியில் இளைஞர் அணியில் சேர்ந்திட வேண்டியதுதான்!"

ஜோக்ஸ் - 4

- கி.ரவிக்குமார்