
"என்ன தலைவரே!
ரொம்ப யோசனையா இருக்கீங்க?"
"இல்ல... சைதாப்பேட்டையில் இருக்கும் இந்த பேங்க் பில்டிங்கை அயனாவரத்தில் இருக்கும் அந்த பேங்க் பில்டிங்கோட எப்படி இணைப்பாங்கன்னு யோசிக்கிறேன்!"

- கி.ரவிக்குமார்
``GDP வளர்ச்சி குறைந்துவிட்டது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சியே... ஒரு சாயா குடிச்சாலும் ஆன்லைன் பேமென்ட்தான் செய்யணும்னு சொன்னதால் மக்களின் OTP வளர்ச்சி எவ்வளவு பெருகி உள்ளது என்பதைப் பாருங்கள்!”

- கீழை அ.கதிர்வேல்
"பொருளாதார மந்த நிலைன்னா என்னய்யா?"
"புதுசா கமிஷன் எதுவும் வராம மாமூல் கமிஷன் மட்டும் வர்றது தலைவரே!"

- மாணிக்கம், திருப்பூர்
"இந்த வங்கி விளம்பரத்தைப் பார்த்து, ஏன் இப்படி பயப்படுறீங்க..?"
“ ‘இது உங்களோட வங்கி'ன்னு போட்டிருக்காங்களே... இப்ப நஷ்டத்துல இயங்குறதாலே, நஷ்டத்தை நம்மளை அடைக்கச் சொல்லுவாங்களோன்னு ஒரு பயம்தான் சார்!"

- வி.சி. கிருஷ்ணரத்னம்