சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

"பகலில் ஆற்று நீர் ஆவியாகும் காரணத்தால், இனி இரவில் மட்டும் ஆற்றில் நீர் ஓட, பலகோடி ரூபாய் செலவில் வகை செய்யப்படும் என்பதை…!"

ஜோக்ஸ் - 1

“உங்க படத்தோட கதையை `என்னோட கதை’ன்னு யாரும் கேஸ் போடலியே எப்படி?”

“ ‘கதைக்கு உரிமை கோருபவர்கள் படத்தின் நஷ்டத்துக்குப் பங்கு கொடுக்க உரிமைப்பட்டவர்’னு விளம்பரம் கொடுத்தேன்.”

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 1

"வசதியா இருக்கிற ஹீரோ படிப்படியா ஏழை ஆயிட்டார். இதைப் புதுசா எப்படிச் சொல்லலாம்?"

"டிராஃபிக் போலிஸ்கிட்ட அடிக்கடி ஃபைன் கட்ற மாதிரி வெச்சுடலாம் சார்!"

- எஸ்.எஸ்.பூங்கதிர்

ஜோக்ஸ் - 1

"சேமித்து வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தலைவர் அடுத்ததாக சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் செல்லவிருக்கிறார் என்பதை…"

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

"பகலில் ஆற்று நீர் ஆவியாகும் காரணத்தால், இனி இரவில் மட்டும் ஆற்றில் நீர் ஓட, பலகோடி ரூபாய் செலவில் வகை செய்யப்படும் என்பதை…!"

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

"தலைவரே, ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுது!"

"என்னது, ஆற்றில் இன்னமும் கரை இருக்கிறதா?"

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

"என்ன அமைச்சரே, எதிரி வாட்ஸாப்பில் சங்கு சத்தம் அனுப்பி உள்ளான்?"

"போருக்கான புரொமோ மன்னா அது!!!'

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 1

“மாப்பிள்ளைக்கு வேலை எதுவும் இல்லைங்கிறதை, தரகர் நாசூக்கா சொன்னாரா...எப்படி?”

“பேஸ்புக்ல புரூஃப் ரீடரா இருக்கார்னு!”

- தி. சிவசங்கரி

ஜோக்ஸ் - 1

"ஜெயிலில் இருக்கும் தலைவருக்கு வீட்டுச்சாப்பாடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு அவரை மேலும் கொடுமைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்!"

- அஜித்