சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியம்: பிள்ளை

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களின் பயணச் செலவைக் குறைக்க, பொங்கலுக்கு அடுத்த நாளே தீபாவளியைக் கொண்டு வருவோம்...’’

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 1

``டாக்டர், நெஞ்சுவலி வந்ததும் முதலுதவி என்ன செய்யணும்?’’

``எதுக்குக் கேட்கறீங்க?’’

``தீபாவளிக்குப் பத்தாயிரம் ரூபாயில பட்டுப் புடவை எடுத்திருக்கேன். பில்லை என் கணவர்கிட்டேயும் என் மாமியார்கிட்டேயும் காட்டணும். அதான் கேட்டேன்.’’

- மலர்சூர்யா.

ஜோக்ஸ் - 1

``தீபாவளிக்கு வாங்கின பட்டாசுல கார்த்திகைக்கு வெடிக்குறதுக்காகக் கொஞ்சம் எடுத்துவெச்சுக்கன்னு உங்க மனைவிகிட்ட சொன்னதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?’’

``ஃப்ரிட்ஜுல எடுத்துவெச்சுட்டா!’’

- அஜித்

ஜோக்ஸ் - 1

``தலைவர் ஏன் இப்போல்லாம் சொல்லாமக்கொள்ளாம திடீர்னு பயணம் மேற்கொள்றார்?’’

``திடீர்னு போனாத்தான் ஹேட்டர்ஸுக்கு `கோ பேக்...’ போஸ்டர் அடிக்க நேரம் இருக்காதாம்...’’

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 1

``ஒரு வருஷமா என் க்ளினிக்குக்கு வர்றீங்களே... முன்னேற்றம் தெரியுதா?’’

``தெரியுது டாக்டர். முதல்ல நீங்க டூ வீலர்ல வந்தீங்க...

அப்புறம் மாருதி கார்ல வந்தீங்க. இப்போ ஆடி கார்ல வர்றீங்க...’’

- எஸ்.முகம்மது யூசுப்.

ஜோக்ஸ் - 1

``அந்தப் படத் தயாரிப்பாளர் அப்பாவின்னு எப்படிச் சொல்றே?’’

``படம் சரியாப் போகலைன்னு திருட்டு வி.சி.டிக்காரங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்குறாரே!’’

- எஸ்.முகம்மது யூசுப்.

ஜோக்ஸ் - 1

``நான் சொன்ன இடத்துல நீங்க ஸ்கேன் எடுக்கலை.’’

``அதனால என்ன டாக்டர்?’’

``ஸ்கேன் ரிப்போர்ட் எனக்குச் சாதகமா இல்லையே?’’

- எஸ்.முகம்மது யூசுப்.

ஜோக்ஸ் - 1

``தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு ஏன் யாருமே வரலை?’’

``வாசல்ல ‘பலகாரம் ஜாக்கிரதை’ன்னு போர்டு வெச்சிட்டேன்.’’

- யுவகிருஷ்ணா

ஜோக்ஸ் - 1

``இந்தப் பட்டாசுக்கு ஏன் என் பேரை வெச்சிருக்காங்க?’’

``இது என்ன பண்ணினாலும் வெடிக்காது தலைவரே!’’

- அஜித்