சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

எதிர்க்கட்சிக்காரங்க உங்க மேல மானலாப வழக்கு போட்டிருக்காங்க

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏரிகளைத் தண்ணீரால் நிரப்புவோம்!”

“அப்படி செஞ்சா உங்க வீடே மூழ்கிடும் தலைவரே!”

ஜோக்ஸ் - 4

- அஜித்

“ஆனாலும் நீங்க ரொம்ப ஓவரா புகழறீங்க தலைவரே!”

“அதனால என்னய்யா?”

“எதிர்க்கட்சிக்காரங்க உங்க மேல மானலாப வழக்கு போட்டிருக்காங்க!”

ஜோக்ஸ் - 4

- அஜித்

“என் வியாதியை மருந்து, மாத்திரையால குணப்படுத்திடலாம்னு முன்னாடி சொன்னீங்க. இப்போ ஆபரேசன்தான் பண்ணணும்னு ஏன் சொல்றீங்க டாக்டர்...”

“முன்னாடி எங்க ஹாஸ்பிடலில் மெடிக்கல் ஷாப் மட்டும்தான் இருந்துச்சு. இப்போ ஆபரேசன் தியேட்டரும் இருக்கே...’’

ஜோக்ஸ் - 4

- கு.ஆராவமுது

“கடன் சுமை அதிகமாயிருச்சு. சொத்தை வித்துதான் அடைக்கணும்!”

“எந்தச் சொத்தை விற்கப்போறீங்க டாக்டர்!”

“இங்கே இருக்கிற யாராவது ஒரு பேஷன்ட் சொத்தைத்தான்!”

ஜோக்ஸ் - 4

- கி.ரவிக்குமார்