சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

``கல்யாண வீட்ல கூட்டம் அதிகமாம்.

``கல்யாண வீட்ல என்னை எதுக்கய்யா பேசக் கூப்பிடுறாங்க?’’

``கல்யாண வீட்ல கூட்டம் அதிகமாம்.சாப்பாட்டுத் தட்டுப்பாடு வருமாம். நீங்க பேசி, கூட்டத்தைக் கலைக்கணுமாம் தலைவரே!

- எஸ்.முகம்மது யூசுப்

``ஏன் அந்த பிரஸ்காரர் ரொம்ப டென்ஷனா இருக்கார்?’’

ஜோக்ஸ் - 2

``அவர் பத்திரிகை அடிச்சுக் கொடுத்த ஜோடி ஒண்ணு விவாகரத்து கேட்டிருக்காம். அதுக்கு, பத்திரிகை அடிச்சவரைக் கைது பண்ணிடுவாங்கன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!’’

- ஹெச். உமர் பாரூக்

"இந்தப் படத்தின் கதைமீது நீங்கள் தொடர்ந்த வழக்கை ஏன் வாபஸ் வாங்குறீங்க!"

ஜோக்ஸ் - 2

"படத்துக்குப் போதுமான விளம்பரம் கிடைச்சிருச்சு யுவர் ஆனர்!'

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

"தெருக்களில் `பிட் நோட்டீஸ்' கொடுத்துக்கொண்டிருந்த எங்கள்தலைவருக்கு, இன்று 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கொடுக்கப்படுகிறதென்றால், அதற்குக் காரணம் அவருடைய உழைப்புதான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

- இரா.வசந்தராசன்

ஜோக்ஸ் - 2

"சர்வர்... எதுக்குய்யா பேப்பர் ரோஸ்ட்கூட ஷாம்பூ சாஷேவை பின் பண்ணி வெச்சிருக்கே?"

"அது விளம்பரம் சார்!"

- அஜித்

ஜோக்ஸ் - 2

போரில் அனைத்து அரசர்களையும் வென்ற சிறப்பு வாய்ந்த மாமன்னன் என்று மன்னரைப் பற்றி பாடல் பாடியுள்ளீரே, புலவரே?

அமைச்சரே! மன்னர் தான் அதீத கற்பனை வளத்துடன் பாடல் பாடச்சொன்னார்!

- எம். சரவணன்

ஜோக்ஸ் - 2

“உமது பாடலில் பிழை இருக்கிறது…”

“இருக்காது மன்னா... இதே பாடல் தான் போன மாசம் உங்களிடம் பாடி நான் பரிசு பெற்றிருக்கிறேன்!”

- மலர்சூர்யா

ஜோக்ஸ் - 2

"எங்க கட்சி கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் எங்கள் எம்.ஏல்.ஏக்களை நல்ல விலைக்கு ஆளுங்கட்சிக்கு விற்க தயராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..."

- மலர்சூர்யா

ஜோக்ஸ் - 2

“அந்த பாங்க்ல தினமும் கூட்டம் அலைமோதுதே, என்ன விஷயம்?”

“ஃபைன் கட்டறதுக்கு லோன் தர்றாங்களாம்!”

- எம். சரவணன்

ஜோக்ஸ் - 2

"புலவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடுகிறாரா?"

"ஆமாம், இன்று வொர்க் ஃப்ரம் ஹோமாம்."

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 2

"டாக்டர் எதுக்கு ஆபரேஷன் பண்ணும்போது உள்ளே வெளியேன்னு போயிட்டு வந்துட்டிருக்கறாரு..? "

"யூடியூப் பார்த்து ஆபரேஷன் பண்றாரு. சிக்னல் சரியா கிடைக்கலைபோல..!"

- ஜெ. மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 2

“நாலு பேரை வாழ வைக்கிறது நல்ல விஷயம்தானே?”

“ஆமா டாக்டர்!”

“அப்படின்னா ஸ்கேன், எக்ஸ்ரே, பிளட்டெஸ்ட் எண்டாஸ்கோபி எடுத்துட்டு வாங்க!”

- எஸ்.முகம்மது யூசுப்.