வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எழுத்தாளர் ஜான் சுந்தர் எழுதிய "மற்றும் பலர்" சிறுகதையை விகடனில் வாசிக்க முடிந்தது. அந்தச் சிறுகதையின் கிளைமேக்ஸில் "சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்..." என்ற வரிகளுடன் வரும் பச்சிளம் குழந்தையை நாயகன் கையில் சுமக்கும் காட்சி, வடிவேலு எனும் கலைஞன் மீதான காதலை மேலும் அதிகரிக்க செய்தது.
அவர் நடித்த நல்ல நல்ல கதாபாத்திரங்களை நினைவு கூறுகையில் அவர் மீதான விமர்சனமும் நினைவுக்கு வந்தது. அதில் மிக முக்கியமானது "வெற்றிக்கொடிகட்டு" படத்தில் வரும் காட்சி.
"வெற்றிக்கொடிகட்டு" படத்தில் "துபாய்ல கக்கூஸ் தான கழுவிட்டு இருந்த... அதான் அடிக்கடி சென்ட்டு அடிச்சிட்டே இருக்கியா... ம்ஹூம்... தள்ளி நில்லு" என்று வடிவேலுவை பார்த்து பார்த்திபன் காமெடியாக வசனம் பேசியிருப்பார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் இயக்குனர் பா.ரஞ்சித் அந்தக் காட்சியை சுட்டிக்காட்டி "அப்ப அந்த தொழில் செய்றவங்களாம் இழிவானவங்களா... அவங்களுக்குப் பின்னாடி இருக்குற வலிய யாரும் பெருசா உணரல..." என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார். அவருடைய வார்த்தைகள் ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தியது.
"வெற்றிக்கொடிகட்டு" படத்தில் கழிவறை சுத்தம் செய்பவர்களை வைத்து காமெடி செய்த அதே வடிவேலுவை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் "பேராண்மை" படத்தில் மிக நன்றாக பயன்படுத்தி இருப்பார்.

துருவன் (ஜெயம் ரவி), கல்லூரி பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்பதாக பொய் சொல்லி அவரை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி தண்டனை வழங்குவார் சாடிஸ்ட் மேலதிகாரி (பொன்வண்ணன்).
துருவனும் அதை ஏற்றுக்கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய அதை பார்த்து வடிவேலு கண்கலங்கி, "நீ ஏப்பா இதெல்லாம் செய்ற..." என்று துருவனிடம் வருந்தி, அதையடுத்து "அப்பா அம்மா செய்ற தொழில தான் பசங்களும் செய்யனுமா?" என்று வடிவேலு அறச்சீற்றத்துடன் கேள்வி கேட்கும் இடம் ரொம்பவே முக்கியமானது.

பொற்காலம், காதல் தேசம், தேவர் மகன், எம்மகன் போன்ற படங்களின் வரிசையில் வடிவேலுவுக்கு "பேராண்மை" படமும் மிக முக்கியமான படம்!
அவரை சரியாக பயன்படுத்திய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் நினைவு தினம் இன்று!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.