
மழை வருமா...
Facebook.com/Ramya Leela
‘`அன்பிற்கு இலக்கணம் அவள்’’
அப்ப போன வாரம் ஒரு போஸ்ட் போட்டீங்களே அவங்க யாரு..?
‘`அவள் அன்பின் ஆதி ஊற்று!’’
Facebook.com/Karthik
உன்னிடம் பேச எனக்கு நிறைய இருந்தது, `ஏதாவது முக்கியமா?’ என்று நீ கேட்ட அந்நொடி வரை.

Facebook.com/Sampathkumar Ganesh
பக்கத்து வீட்டுக்காரன் `ஷூவை’ தட்டிக்கிட்டு இருக்கான்... உள்ள பூச்சிகள் இருக்குமாம்.
அதுக்குத்தாண்டா சாக்ஸையும் உள்ள வைக்கணும்ங்குறது! பாம்பே போனாலும் செத்துரும்!
Facebook.com/Prabhakaran
Namashivayam Rajendran
இதே டிசைனில் வேற கலர் இருக்கா என்று கேட்கும் பெண்களின் உளவியலை, டிக் டொக்கில் இதே ஆடியோ க்ளிப்பிற்கு வேற ‘பர்ஃபாமன்ஸ்’ இருக்கிறதா என்று தேடுகையில் புரிந்துகொள்ள முடிகிறது...
twitter.com/yugarajesh2
குண்டா இருந்தால் ‘கொழுப்பா’ இருக்கப் போகுதுன்றான்,
இளைச்சிருந்தால் ‘சுகரா’இருக்கப் போகுதுன்றான்,
கோபப்பட்டால் ‘ரத்தக்கொதிப்பா’
இருக்கப்போகுதுன்றான்,
அமைதியா இருந்தால் ‘மன அழுத்தமா’ இருக்கப்போகுதுன்றான்.
#சொந்தக்காரனுங்க அட்ராசிட்டி

twitter.com/sultan_Twitz
நித்தி - சூரியன் உதிப்பதை 40 நிமிடம் நிறுத்தினேன்...
10 நிமிடம் ஓடுன கேமராவையே நிப்பாட்ட முடியல... சூரியனை நிப்பாட்டுனாராம். போவியா!
twitter.com/shivaas_twitz
குடும்ப அரசியலில் மாமியார் தலைவர் என்றால், நாத்தனார்தான் இளைஞர் அணிச் செயலாளர்.
twitter.com/Buddhan_
ரோஹித் பாய்... எப்ப ஃபார்முக்கு வருவீங்க...எப்ப 200 அடிப்பீங்க?
twitter.com/Thaadikkaran
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதே இல்லை ‘டாக்கிங் டாம்!’
twitter.com/sundartsp
ஜீன்ஸைக் கண்டுபிடித்ததென்னவோ வெள்ளைக்காரனா இருக்கலாம், ஆனா அதைத் துவைக்கவே வேணாம்னு கண்டுபிடிச்சவன் நம்மாளுங்கதான்!
twitter.com/Kozhiyaar
வீடு கட்டும்போது அதிக நேரம் செலவழிக்கலாம் என்று ஆசையுடன் கட்டப்பட்டு, பின்பு துணி காயப் போடுவதற்கு மட்டும் சென்று வரும் இடம் ‘பால்கனி!’

twitter.com/ItsJokker
விருப்பமின்றிச் சொல்லும் பொய்களில்
“நா நல்லா இருக்கேன்” என்பதும்,
விரும்பிக் கேட்கும் பொய்களில்
“நீங்க அழகா இருக்கீங்க” என்பதும் முதலிடம் பிடித்துவிடுகிறது..!
Facebook.com/Saravana
karthikeyan Chinnadurai
கைக்குழந்தையைக் கீழே இறக்கி விடுவதுபோல் காதலை முறித்தாள்.