சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

ஹிமா தாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹிமா தாஸ்

ஹிமா தாஸ்

twitter.com/Thaadikkaran

குழந்தைகளோடு சினிமாவுக்குப்

போறவங்களுக்கு அரைமணி நேரத்திற்கு ஒரு இடைவேளை உண்டு..!

வலைபாயுதே

twitter.com/amuduarattai

கலர் கலராய் மிட்டாய் சாப்பிடுவதில் தொடங்கி, கலர் கலராய் மாத்திரை சாப்பிடுவதில் முடிவது மனித வாழ்க்கை.

twitter.com/Kozhiyaar

பாதி வாழ்க்கை ரிமோட் தேடுவதிலும்,

மீதி வாழ்க்கை மொபைல் தேடுவதிலுமே முடிந்துவிடுகிறது!

twitter.com/ameerfaj

ஏழு கழுதை வயசானாலும், ‘வேலை கிடைக்கலயே’னு வருத்தப்படுறதவிட லவ் பண்ண ஒரு பொண்ணு கிடைக்கலயே’ன்னு வருத்தப்படுறவன் தான் உண்மையான 90s கிட்ஸ்!

twitter.com/HAJAMYDEENNKS

பிக்பாஸ்ல எவிக்சன் பண்ற மாதிரி தொகுதிக்கு எதுவும் செய்யாத

MLA-க்களை மக்கள் ஓட்டு போட்டு சட்டசபையிலிருந்து எவிக்சன் செய்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!

வலைபாயுதே

twitter.com/ItsJokker

அங்கிள்ஸின் ஞாயிறுகள் கறிக்கடை மற்றும் தியேட்டரிலும்,

சிங்கிள்ஸின் ஞாயிறுகள் சலூன்கடை மற்றும் துணி துவைப்பதிலும் கொண்டாடப்படுகின்றன!

twitter.com/GreeseDabba2

முன்னெல்லாம், ஒரு படம் நல்லா இருந்தா பார்ட்-2 எடுத்துட்டிருந்தாங்க.

இப்பெல்லாம், முதல்ல எடுத்ததுதான் நல்லா வரல, அடுத்த பார்ட்டாவது நல்லா வருதான்னு பார்ப்போம்னு எடுக்கறாங்க.

twitter.com/Deepan_offl

தமிழக அரசு நன்றாக இயங்கிவருகிறது - ரஜினிகாந்த். #அதனால நான் அரசியலுக்கு வர ஆறு மாசம் ஆகும்.

வலைபாயுதே

twitter.com/bhavanya9512

கல்யாண மண்டபத்தில்...

பெண்கள் : புடவை நல்லா இருக்குன்னு யாருமே சொல்லமாட்டிராங்களே!

ஆண்கள் : சரக்கு சப்ளை பண்ற மாப்பிள்ளை ஃபிரெண்டு யாருன்னு தெரியலையே!

twitter.com/ItsJokker

8 லட்சம் வருட வருமானம் இருக்குற ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு உண்டாம், 25,000 ரூபாய்க்கு ஒரு AC வாங்கியிருந்தா ரேஷன் கிடையாதாம். வெரி நைஸ்!

twitter.com/manipmp

30 ரூபாய்க்கு பெட்ரோல் போடணும்னா முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொள்வது எழுதப்படாத விதி.

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

மீட்டிங்கின் போது பேசாதவர்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் கூடி ஒரு மீட்டிங் போடுவது டிசைன்!

twitter.com/pachaiperumal23

மீசை வைத்த குழந்தைகளின் பேச்சைக் கேட்க வேண்டுமா?

இரவு மதுபான பாருக்கு வாருங்கள்.

“மோப்பிள நி எக்கு தய்வம்...’’

வலைபாயுதே

twitter.com/Ramesh46025635

ஏசி உட்பட 10 அம்சங்கள் இருந்தால் குடும்ப அட்டை ரத்து - செய்தி

``குடும்பத்த ரத்து பண்ணாம விட்டீங்களே அதுவரைக்கும் சந்தோசம்.”

வலைபாயுதே

facebook.com/jvp.sachin

புதுப் புது மாவட்டங்களை உருவாக்குறது மக்கள் நலனுக்காகவா இல்ல, கட்சிக் காரங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் போஸ்ட் பிரிச்சுக் கொடுக்கவான்னு இனிமேதான் தெரியும் எனக் கூறிக்கொண்டே நடந்தாராம் நடந்து சென்றவர்.

facebook.com/Bogan Sankar

ஆண்களால் கடைசிவரை டீனேஜிலும் பெண்களால் கடைசிவரை குழந்தைப் பருவத்திலும்தான் வாழமுடியும்.இல்லாவிட்டால் அவர்கள் செத்து விடுவார்கள்.

- குழந்தையானந்தா சாமியார்.