
மிக மோசமான ஒரு நாளுக்குப் பிறகு ஒரு மிட்டாய் நாளை நீட்டும்..
facebook.com/Bogan Sankar
மிக மோசமான
ஒரு நாளுக்குப் பிறகு
ஒரு மிட்டாய் நாளை நீட்டும்
கைகளின் சூழ்ச்சியை
நான் கண்டுகொண்டேன்.

facebook.com/Pa Raghavan
ஆறேழு பக்கெட்டுகளில் நாள் முழுவதற்குமாகத் தண்ணீர் பிடித்து வைக்க ஒரு போராளி போதும். பிடித்த பக்கெட்டுகளைச் சிந்தாமல் நகர்த்தி வைக்கத்தான் ஒரு கலைஞன் தேவைப்படுகிறான்.
facebook.com/Mano Red
கவிதைக்குக்கூட
பொய் சொல்ல மாட்டேன் என்றால்
பிறகெப்படி
மனிதம் வளர்ப்பது?
facebook.com/Karthik
தலைவி : ஏங்க உங்க பிள்ளைக சேட்ட பண்ணுது.நான் : பிள்ளைங்களா, சேட்ட பண்ணாதீங்க.பிள்ளைக : சரி அப்பா. (Chorus)தலைவி be like . இவரு கண்டிச்சிட்டாராம், அதுக உடனே திருந்திடுச்சாம்.

facebook.com/Dinesh Kathirvelan
யூடியூப்ல 10 நிமிஷத்தில சமையல முடிச்சுடுரானுவ, வூட்ல லைட்டர் தேடவே அரமணிநேரம் ஆவுது.
facebook.com/Brinda Ponni
இந்தியக் கலாசாரங்கறது... நம்ம அப்பா அம்மாவை hug பண்ணி, பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அம்மாவை அடிச்சு, பார்த்திருப்போம்.
R Muthu Kumar
ஷேர் ஆட்டோக்காரருக்கு வண்டியில் இருக்கும் பயணி அற்பப்பதர். அடுத்த நிறுத்தத்தில் ஏறப்போகும் பயணிதான் எல்லாம் வல்ல இறைவன்!

twitter.com/nandhu_twitts
அப்பவே சொன்னேன் கேட்டீங்களா?! என்பதைத்தான் இப்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..!
twitter.com/shivaas_twitz
கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளை ஊர்வல வண்டியில உட்கார வெச்ச குழந்தை மாதிரி நம்மள சில ஆபீஸ் மீட்டிங்ல உட்கார வெச்சிருப்பானுங்க. எதுக்கு உட்கார வெச்சாங்கன்னே தெரியாது.
twitter.com/karukkan
நவீனப் புறக்கணிப்புகளில் ஒன்று எமோஜிகளில் பதில் போடுவது!
twitter.com/stevereports
மாநில அந்தஸ்து பறிபோனதே தெரியாமல் ஜம்மு காஷ்மீர் மக்கள் இருப்பது ஜனநாயகப் படுகொலைதானே? தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு, இணையதளம் முடக்கம், 144 தடை உத்தரவு, வீட்டுக்காவல்.
twitter.com/RahimGazzali
அன்புமணியை முதல்வராக்குவோம் என்ற லட்சியத்துடன் என் செயல்பாடுகள் இருக்கும்! - பா.ம.க-வில் மீண்டும் இணைந்த பேராசிரியர் தீரன். அன்புமணியே அதையெல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டுதான் எடப்பாடி பின்னால் நிற்கறாரு. நீங்க வேற ஏங்க அதை ஞாபகப்படுத்தி அவரை சோகமாக்குறீங்க?

twitter.com/HAJAMYDEENNKS
எதிர்க்கட்சி இல்லாட்டி என்ன நடக்கும்?
எல்லாமே நடக்கும்!
twitter.com/Thaadikkaran
தூக்கமே கலையாத மாதிரி தூங்கினா அது திங்கள் - சனி! தூங்கிட்டு இருக்கும்போதே என்னடா தூக்கம் கலையுற மாதிரி இருக்கேன்னு நினைச்சா அது ஞாயிறு..!
twitter.com/ItsJokker
“ஒரு ஊர்ல” என ஆரம்பிப்பவை மட்டுமே கதை என அங்கீகாரம் பெறுகிறது குழந்தைகளின் உலகத்தில்..!

twitter.com/urs_venbaa
ரோம ராஜ்ஜியம் ஒரு நாளில் வீழ்வதில்லை #வழுக்கை
twitter.com/ItsJokker
ஹலோ, யார் சார் நீங்க? மெசேஜ் அனுப்பிருக்கீங்க?!
என்னய தெரியல... நாதான் வருஷா வருஷம் “ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே” அனுப்புவனே..!