
‘விரைவிலேயே எடப்பாடி ஆட்சி கவிழும்’ என்று இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிவருவதைக் கேட்கும் தி.மு.க, அ.தி.மு.க-வினரின் மைண்டு வாய்ஸ் என்னவாக இருக்கும்?
தி.மு.க : “க்கும்... இவரு எந்த நேரத்துல ராகுல் பிரதமர்னு அறிவிச்சாரோ அது மாதிரிதான் புஸ்ஸுனு போகும்...”
அ.தி.மு.க : “ஆசையிருக்கு சட்டசபை நடத்த... ஆனா அதிர்ஷ்டமிருக்கு சட்டையைக் கிழித்துக்கொள்ள...”
பாலா சரவணன், சென்னை - 16
2021 இலட்சியம். இப்ப இருப்பது அலட்சியம்.
manipmp
திரும்பத் திரும்பப் பேசற நீ... என்ன திரும்பத் திரும்பப் பேசற?
uma_Maheshwari1
ஸ்டாலின் சொல்வதைக் கேட்கும்போது ‘தீரன் அதிகாரம் ஒன்றில்’ வரும் “தோ கிலோமீட்டர்” தான் மைண்டு வாய்ஸாக ஒலிக்கும்.
prabacurren
அ.தி.மு.க-வினர் மைண்டு வாய்ஸ்: அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து, அமித் ஷா ஆட்சி நடப்பது தெரியாமல் இன்னும் “விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்”ன்னு சொல்லிட்டு இருக்காரு!
amuduarattai
தி.மு.க: இலவு காத்த கிளியாய் நாங்கள் இருக்கிறோமய்யா...
அ.தி.மு.க : பூதம் காத்த புதை யலாய் நாங்கள் இருக்கோமய்யா.
Muthoosh Samy

தி.மு.க-வினர்: என்னது, எடப்பாடி ஆட்சியில் இருக்கிறாரா?
அ.தி.மு.க-வினர்: அண்ணா தி.மு.க என்றால் இந்நேரம் கலைந்திருக்கும். இது அமித்ஷா தி.மு.க, கலையாது.
Viyan Pradheep
சிந்துபாத் & விக்கிரமாதித்தன் வேதாளம் ஞாபகம் வரும்.
நித்யகண்டமும் பூரண ஆயுசும் நினைவுக்கு வரும்!
Umar Mydeen
அனைவரின் மைண்டு வாய்ஸும்... ‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும்’ என்பதுதான்.
கலீல் பாகவீ
‘பசிக்குது ஆனா சாப்பிட முடியலை’, ‘உன்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும்’ - இப்படி யெல்லாம் காதல் வந்தவர்க ளுக்கான விநோத அறிகுறிகளை விதவிதமா சொல்லியாச்சு. நீங்கள் பார்த்த, அனுபவித்த விநோதமான காதல் அறிகுறிகளைச் சொல்லுங்க.
காலிங் பெல் அடிச்சாகூட போன் எடுத்து ‘ஹலோ ‘ சொல்லுவாங்க.
சரஸ்வதி தென்னரசு, சென்னை 87
நாலைந்து தடவை கேட்டதுக்கு அப்புறந்தான் “அய்யய்யோ... கவனிக்கலையே. என்ன கேட்டிங்க...” என்று எதிர்க்கேள்வி வரும்..!
maathorubhagan
பலமுறை கேட்டிருந்த பாடல்களின் அர்த்தம் முதல்முறை புரியத் தொடங்கும்...
M__karthika
‘லைஃப் இஸ் வெரி பியூட்டிஃபுல் மச்சி’ என துரை இங்கிலீசுலயெல்லாம் சிலாகிக்கும்!
selvachidambara
ம்... அப்புறம் வேற என்ன?
நீயே சொல்லு...
இந்த வார்த்தைகளை மட்டும் மணிக்கணக்கில் செல்போனில் பேசிக் கொண்டிருப்பது.
RamuvelK
நம்ம பெயரையும் காதலி பெயரையும் இணைத்து ஒரு புதிய பெயரை உருவாக்கி தமிழுக்குப் பெருமை சேர்த்ததுபோல சந்தோஷப்படுவோம்.
iThanaathipathi
வாகா எல்லையில் கொண்டு போய் விட்டாலும், நடந்து போன் பேசிட்டே பாகிஸ்தானுக்குள்ளேயே போனாலும் போயிடுவாங்க. அப்படி மெய்மறந்து போன் பேசுவாங்க.
Aruns212
அவள் செல்போன் ரிங்டோன் போல, வேறு யாருடைய செல்லில் இருந்து ரிங்டோன் ஒலித்தாலும் அவளே பக்கத்துல நிற்கிறாளோன்னு திரும்பிப் பார்க்கச் சொல்லும்.
ஆர்.ரமேஷ் பாபு
தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. கூடவே இருக்கும் நண்பர்களை எல்லாம் சந்தானம், விவேக், வடிவேலு, யோகிபாபு லெவலுக்கு காமெடியன்களாக நினைக்கிறதுதான் கொடூரத்தின் உச்சமே!
Ramkumar Kumar
‘பிகில்’ - டைட்டில் காரணம், நான்கே வரிகளில் ஜாலியா சொல்லுங்க...

விஜய்யின் ஒவ்வொரு படமும் வெளிவர ஏதாவது தடை வந்துகிட்டே இருக்கு. பிகில்னு பேர் வெச்சா, விசில் ஊதினதும் வண்டி புறப்படுவதுபோல படமும் எந்தத் தடையுமின்றி வெளியாகும்னு வெச்சிருக்கலாம்.
வ.சந்திரா மாணிக்கம், கோச்சடை
எந்த டைட்டில் வெச்சாலும், அர்த்தம் கண்டுபிடிச்சுத் தகராறு பண்ணுவாங்க! அர்த்தமே இல்லாம டைட்டில் வெச்சுட்டா என்ன பண்ணுவாங்க? அதுக்குத்தான்!
கி.ரவிக்குமார், நெய்வேலி
திருட்டு வீடியோ எடுக்கறவனைக் கொல்ற கதை. Piracy Kill - ஷார்ட்தான் பிகில்.
SENTHIL_WIN
தெறின்னு வெச்சதுக்கும் காரணம் இல்ல, மெர்சல்னு வெச்சதுக்கும் காரணம் இல்ல, அது மாதிரியே அடுத்த டைட்டில்லேயும் காரணம் இருக்கக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக பிகில்னு அட்லி வெச்சிருப்பாரு.
Mano Red
‘மெர்சல்’, ‘சர்க்கார்’ படங்களுக்கு வந்த மாதிரி எந்த எதிர்ப்பு வந்தாலும் ‘ஊதித் தள்ளிடுவோம்’னு எதிர்ப்பவர்களுக்குக் காட்ட பிடிச்ச டைட்டில்தான் ‘பிகில்.’
Ram Aathi Narayenan
எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வந்து, தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் கமிஷனிடம் ‘பிகில்’ சின்னத்தைக் கேட்க வசதியாக இருக்கும் என்பதால்...
மலர் சூர்யா
சூப்பர் ஸ்டார் ‘விசில்’அடிச்சு முன்னுக்கு வந்தாரு. இளைய தளபதி ‘பிகில்’அடிச்சு முதல்வராகப் போறாரு!
S Johnravi S Ravichandiran
ஒரு நண்பர் தன் மனைவி பெயரைத் ‘தொல்லை’ என்று சேவ் பண்ணியிருக்கார். அப்படி உங்க கான்டாக்ட் லிஸ்ட்ல யார் பேரையாச்சும் வித்தியாசமா சேவ் பண்ணி வெச்சிருக்கீங்கன்னா யார் பேரை என்னன்னு சேவ் பண்ணி வெச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க. (உண்மை மட்டும்)
எப்பவும் சிசிடிவி அறையிலேயே உட்கார்ந்திருக்கும் மேனேஜர் மந்திரமூர்த்தி பேரை ‘பிக் பாஸ்’ என...
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
ஃபிரெண்டோட பேரு... அவ அறிமுகம் ஆனதிலிருந்து இப்போ வரை எங்க ஃபிரெண்ட்ஷிப் எப்டி ஒவ்வொரு ஸ்டேஜா மாறுச்சுன்னு ஒவ்வொரு டைம்லயும் மாத்தி மாத்தி சேவ் பண்ணின பெயர்கள்ல தெரியும்.
1. Name 2. Partner 3. My daylight 4. My curse 5. My rejoice 6. Best half
RajiTalks
ஹஸ்பண்டு பேரை மோடின்னு சேவ் பண்ணிருக்கேன். யார் சொல்றதையும் கேக்காம அவர் நினைச்சதை அவர் இஷ்டத்துக்கு செஞ்சிட்டே இருக்கறதால.
vikky_tweet
கோழிக் கடைக்காரர் நம்பரை ‘கொக்கரக்கோ’ன்னு வெச்சிருக்கேன்.
altaappu
என் ஃபிரெண்டு கவி வாட்ஸ்-அப் குரூப்ல எப்பவாவதுதான் வருவா. அதனால நாங்க எல்லாரும் சேர்ந்து சமீபத்துல அவ பேர ‘வாட்டர்’னு மாத்தி சேவ் பண்ணிட்டோம்.
Sabena_Aadhi
பக்கத்து வீட்டுப் பாட்டிக்குப் பேரு... CCTV...
iamkingvarman
என் நண்பர் பொன்னம்மாள் என்ற பெயரை சுருக்கமாக Pon am என்று செல்லில் வைத்திருந்தேன். முகம் கழுவிக்கொண்டி ருந்தபோது என்மகன் ``அப்பா, பொணம் காலிங்’’ என்று சொல்லியபடி என் செல்லை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான். சுருக்கமாக பெயரை சேவ் செய்யும்போது ஜாக்கிரதையா பண்ணுங்க மக்களே!
Senthilkumar Shanmugam
அடிக்கடி இரவு சரியாக 9 மணிக்கு வந்து பேசும் நண்பர் பெயர் 9 மணி கணேசன். அவருக்குத் தெரியாது. ஆனால், இருப்பது ஒரே கணேசன்தான்.
Shanmugasundaram-
Tss Thirumalai Kozhundhu
கடைசி நிமிடத்தில் உதவி கேட்டு வரும் உறவினரை ‘தட்கல்’ என்ற பெயரில் சேவ் செய்திருக்கிறேன்.
Raman Sri
நடிகர் சங்கத் தேர்தல் - சிறுகுறிப்பு வரைக...
அரசியல் தேர்தலில் நடிகர்கள் நுழைஞ்சாங்க. நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் நுழைஞ்சிடுச்சு. அவ்வளவுதான்.
எஸ்.கருணாகரன், சென்னை 53
பாண்டவர் அணியானது ‘பஞ்சர்’ பாண்டவர் அணியா மாறப்போகுதா... இல்லை, சங்கரதாஸ் அணியானது ‘சங்கட’தாஸ் அணியா மாறப் போகுதான்னு தெரியப்போற தேர்தல்..!
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி
3000 பேருக்குள்ள தேர்தல். வாட்ஸ்-அப்லயோ கூகுள் ஃபார்ம் அனுப்பியோ, ஃபேஸ்புக் குருப்புல ஒரு `போல்’ வெச்சோ சிக்கனமா முடிக்கிறத விட்டுட்டு...
nikanth
கூத்தாடிகள் ரெண்டுபட்டதை ஊரே கொண்டாடியது.
R4_Rishi
‘மெட்ராஸ்’ பட சுவர் மாதிரி உருவகப்படுத்தப்படும் சங்கக் கட்டடம். அதை மையப்படுத்தி நடத்தப்படும் கேலிக்கூத்து.
shivaas_twitz
அரசியல்வாதிகளின் பதவி மோகம், தேர்தல் கூத்துகளைக் கிண்டல் செய்து படமெடுக்கும் திரைத்துறை, தன் சுயபிம்பம் அதைவிட கேலிகூத்தானது என்பதைத் தானே காட்டிக்கொள்கிறது...
dharmaraaaj
ஸ்டார்ட்... கேமரா... எலெக்ஷன்...!
KLAKSHM14184257
இது ஒன் லைன் ஸ்டோரி கிடையாது சிறுகுறிப்பு எழுத... 65 முதல் 70 சீன்கள் வரும்... இடையில் காமெடி, சென்டிமென்ட், சோகம், டூப் இல்லாத ஒரிஜினல் ஃபைட் இடையிடையே குத்துப்பாடல்கள் என விலாவரியா பிரிச்சா ‘பெரும் குறிப்பு’ தான் எழுத முடியும்.
Valangaiman Noordeen
இங்கே நடிப்பது வேட்பாளர்கள் மட்டுமல்ல...வாக்காளர்களும்தான்...!
Rishivandiya Baskar
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு.
வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம்.
கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? இளைஞரணிச் செயலாளர் ஆனபிறகு உதயநிதி நடிக்கும் படத்தில் ஓப்பனிங் சாங் வரிகள் என்னவாக இருக்கலாம்?
? சில்லறை இல்லாத மாசக்கடைசில பேப்பர்ஸ் இல்லாம போலீஸ்கிட்ட மாட்டினா என்ன பொய் சொல்லுவீங்க?
? பெட் அனிமல்ஸுக்குப் பேர் வைக்கிற மாதிரி உங்க மொபைலுக்குப் பேர் வைக்கச் சொன்னா என்ன பேர் வைப்பீங்க... காரணத்தோட சொல்லுங்க!
? கோலி தலைமையில் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்ற இந்திய அணிக்கு, ரெண்டு வரில இப்ப என்ன சொல்லுவீங்க?
? உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் என்ன தலைப்பு வைப்பீர்கள்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.