
மூப்பனாரின் பயோபிக்கை எடுக்கலாம். அதில் ஜி.கே.வாசனை மூப்பனாராக நடிக்க வைக்கலாம்.
? பயோபிக்குகளின் காலமிது. தமிழில் யாருடைய பயோபிக்கை எடுக்கலாம்? அதில் யாரை நடிக்கவைக்கலாம்?
மூப்பனாரின் பயோபிக்கை எடுக்கலாம். அதில் ஜி.கே.வாசனை மூப்பனாராக நடிக்க வைக்கலாம்.
அவ்வை. கே.சஞ்சீவிபாரதி, கோபி
எம்.ஆர்.ராதா - எம்.ஆர்.ஆர்.வாசு
க.ரவீந்திரன், ஈரோடு
செல்லூர் ராஜு பயோபிக்கில் எம்.எஸ். பாஸ்கர்
Vaira Bala
நடிகை ஷோபா பயோபிக். ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமாகப் பொருந்துவார்.
ashokan.palanisamy
கல்கி சாமியார் - நடிகர் ஜெயப்பிரகாஷ்
kayathaisathya
சில்க் ஸ்மிதா - பிந்து மாதவி
குமுதாசலம், ஆத்தூர், சேலம்
ரஜினி - சிவகார்த்திகேயன்
அலமேலு, சென்னை
அர்விந்த் கெஜ்ரிவால் - ரமேஷ் அரவிந்த்
டோமி சாந்தபிரியா, சென்னை
ஜெ.தீபா - வனிதா விஜயகுமார்
Thamilarasi
ஸ்டாலின் பயோபிக்கை எடுத்தால் பேசாமல் அவரையே நடிக்க வைக்கலாம்.
டோமி சாந்தபிரியா, சென்னை
கக்கன் - பிரகாஷ் ராஜ்
பத்மபிரியா பாலகுரு

? நம் அரசியல்வாதிகளில் இனி யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம், ஏன்?
அமித்ஷா. பா.ஜ.க தோற்கும் இடமெல்லாம் ஆபரேஷன் தாமரையைச் செயல்படுத்துகிறார் அல்லவா?
Dharanishraja
டி.டி.வி.தினகரன். பேசிப் பேசியே பேஷன்ட்டைக் குணப்படுத்தும் அளவுக்குத் திறமை இருப்பதால்.
manipmp
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இத்தாலிய - இந்திய ஜீன்களைப் பிரித்து மேய்ந்து ஆராய்ச்சி செய்தவர் என்பதால், மரபியலில் முனைவர் பட்டம் வழங்கலாம்..!
KLAKSHM
நாஞ்சில் சம்பத். இன்னோவா காரை ரிட்டர்ன் கொடுத்த மனவருத்தத்தில் இருப்பவரை, ஆசுவாசப்படுத்தவாவது ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்..!
KLAKSHM14184257
தேர்தலில் ஜெயிக்காமலேயே கூட்டணி தயவால் கட்சிக்கு எம்.பி பதவி பெறும் பா.ம.க தலைவர் ராமதாசுக்குக் கொடுக்கலாம்.
parveenyunus
ஹெச்.ராஜாவின் அட்மினுக்குத் தரலாம்.
ஆர்.ஜி.காயத்திரி, நெல்லை
குஷ்பு, தமிழ்நாட்டு மருமகள். இந்த ஒரு தகுதி போதுமே!
சாமந்தி, வேலூர்
? இது குழந்தைகள் தின மாதம். சிறு வயதில் உங்களுக்கு அதிகம் பிடித்து, தற்போது மிஸ் பண்ணும் விஷயம் என்ன?
`ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' என்று ஆல் இந்தியா ரேடியோவில் கம்பீரக் குரலில் ஆரம்பிப்பது.
vc.krishnarathnam
அரசுப் பொதுத்தேர்வு 10th,+2 ரிசல்ட்டை தினசரி பேப்பரில் கண்டு மகிழ்ந்த தருணங்கள்.
Muthoosh Samy
வாடகைக்கு சைக்கிள் எடுத்து, கீழே விழுந்து கை காலை சிராய்ப்பு ஆக்கி சைக்கிள் ஓட்டிப் பழகி ஒரு மணி நேரத்துக்கு இடை இடையே சைக்கிள் கடையில் போய் ‘நேரம் ஆயிட்டா... நேரம் ஆயிட்டா?’ வென சைக்கிள் கடைக்காரரை நச்சரிச்ச அந்த இனிமையான நினைவுகள் பிடிக்கும்.
Kethzy Agnes லயோலா, சென்னை
டூரிங் டாக்கீஸில் மண் குவித்து அதன்மேல் அமர்ந்து சினிமா பார்த்தது.
க.வில்லவன் கோதை, சென்னை
கோபால் பல்பொடி... ரசித்து ருசித்து சாப்பிட்டது. இப்ப மிஸ் பண்ணுவது.
manipmp
ரமணன் சார் டிவியில வந்து லீவ் சொல்றது ரொம்பப் பிடிக்கும்.
venkime
புத்தக நடுவில் மயிலிறகு வைத்து குட்டி போடும் என்று காத்திருந்தது.
balasubramni
பாட்டி வீட்டுப் பயணம்தான். அங்கே கிடைக்கும் டூரிங் டாக்கீஸ் அனுபவம், மால் தியேட்டர்களில் கிடைப்பதே இல்லை. அப்போது பார்க்கும் படங்கள் எல்லாமே பிடிக்குமே.
mekalapugazh
‘சாந்தி’ தியேட்டரில் சிவாஜி படமும் பக்கத்தில் ‘பிளாசா’ தியேட்டரில் எம்ஜிஆர் படமும் அடித்துப்பிடித்து டிக்கெட் வாங்கி விசிலடித்துப் பார்த்தது. இப்போது சாந்தியும் இல்லை பிளாசாவும் இல்லை.
parveenyunus

? தீவிர அரசியலில் இருக்கும் சீமான், மீண்டும் சினிமா இயக்க வந்தால்... அவருக்கு ஒருவரியில் ஒரு கதை சொல்லுங்களேன்!
சீமான் சமைக்க இருந்த ஆமைகளை எதிரி நாட்டு ராணுவம் கடத்திட்டுப் போயிடுது. நம்ம ஆளு யானைப் படையைப் படகுல ஏத்திட்டுப்போய் ஆமைகளை மீட்கிறார்.
Dharanishraja
கதை எதுவோ, ஆனால் தலைப்பு நிச்சயம் `வாய்ப்பேயில்ல ராஜா'தான்.
Aruns
எதுக்கெடுத்தாலும் `புஹா புஹா’ன்னு சிரிக்கிறார் ஹீரோ, அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.
mohanramko
ஒரு மந்திரி ஒரே கப்பல்ல 60,000 யானையைக் கொண்டு போகும்போது, எதிரிகிட்ட மாட்டிக்கிடுறார். ஹீரோ ஒரே ஒரு ஆமை ஓட்டைப் படகாக்கி, ஏகே74 துப்பாக்கிய யூஸ் பண்ணி எதிரியைக் காலி பண்ணி, மந்திரியையும் யானைப்படையையும் காப்பாத்திடுறார்.
RamuvelK
பகலில்
தோசை மாஸ்டர்
இரவில்
ஏகே74 மான்ஸ்டர்.
sorkkalanjiam
ஆமை அண்ணனும் ஊமைத் தம்பிகளும்..!
Ramesh
தூங்கவிடாம வரிசையா கதை சொல்லி, வந்தேறிகளையெல்லாம், சொந்த இடத்துக்கே திரும்பி ஓட வைக்கிறார் ஹீரோ..!
KLAKSHM
? நீங்கள் தேர்தல் ஆணையர் ஆனால் அதிரடியாக என்ன உத்தரவு போடுவீர்கள்?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிபோல பிடித்த வேட்பாளர்களை மக்கள் அவரவர் இல்லங்களில் இருந்து கொண்டே தங்களது மொபைலில் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் புதிய தேர்தல் முறை.
ஜீவகன் மகேந்திரன்
அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகள் பெறும் கட்சிகள் தகுதி நீக்கம் செய்யப்படும்..!
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி-11
கட்சி தாவியவர்கள் 10 ஆண்டுகள் கழித்தே தேர்தலில் போட்டியிட முடியும்..!
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி-11
செல்லாத நோட்டை வெளியே தள்ளும் இயந்திரம்போல் கள்ள ஓட்டை வெளியேற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்க ஆணையிடுவேன்!
poet.RajaMaZhai

ஒரே வேட்பாளர் இரு தொகுதியில் நிற்கும் சட்டத்தை ரத்துசெய்து வீண் செலவுகளைத் தவிர்ப்பேன்.
jerry.darvey
வாக்குப்பதிவு அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்படும். வாக்குச்சாவடி முறையை ஒழிப்பேன்.
Dharanishraja
பிரதமர், முதலமைச்சர், துறைகளுக்கான அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் பொதுத்தேர்தல் மூலமாக மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.
kanniya.kumar
தேர்தலில் கூட்டு, பொரியல், பச்சடி இதெல்லாம் கிடையாது. கட்சிகள் தனித்தனியா தேர்தலில் நிற்கணும். திறமையை நிரூபிக்கணும்... இல்லேன்னா, பிச்சுப்புடுவேன் பிச்சு!
vc.krishnarathnam
எந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இருக்கிறதோ, அந்தத் தொகுதியில்தான் அவர் போட்டியிட முடியும்.
விவேக்
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தமிழர்களின் சுவர்க்கிறுக்கல் கலாசாரத்திலிருந்து பாரம்பர்யச் சின்னங்களைக் காக்க ரகளை ஐடியா ப்ளீஸ்...
? ஒரு தமிழ்ப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யவேண்டுமென்றால் உங்களின் சாய்ஸ் எந்தப் படம்... ஏன், யார் நடிக்கலாம்?
? சமீபத்தில் சிங்கிள்ஸ் டே கொண்டாடிய மொரட்டு சிங்கிள்களுக்குப் பரிசளிக்க சிறந்த கிஃப்ட் எது?
? ‘தர்ம சங்கடம்’ என்பதற்கு சுவையான உதாரணம் சொல்லுங்கள்.
? உதயநிதி ஸ்டாலின், ஓ.பி.ரவீந்திரநாத் இருவருக்கும் கலக்கலான அடைமொழிகள் சொல்லுங்கள்.
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com