சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை

விஜய், விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய், விஜய் சேதுபதி

ஷாஜகானும் 96 காதலர்களும்

தன் கட்சி ஆள்களைத் தக்கவைத்துக்கொள்ள டி.டி.வி தினகரனுக்கு ‘நச்’ ஐடியாக்கள் கொடுங்களேன்!

வாசகர் மேடை

கூண்டோடு எல்லாருக்கும் அமெரிக்கப் பயணம் ஏற்பாடு செய்து நயாகரா அருகே ரிசார்ட்டில் தங்க வைத்து வேண்டியதைச் செய்யலாம்.

பி.என். நரசிம்ம மூர்த்தி

ட்சியில் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தொடர்ந்து இருப்பவர்களுக்கு பென்சன் திட்டம், கிராஜுவிட்டி திட்டம் அமல்படுத்தலாம்.

டி.செல்லதுரை, மடாம்பாக்கம்,

ன்டெய்னர் என்கிட்டதான் இருக்குன்னு சொன்னா போதும்... போனவங்களும் திரும்பி வந்துடுவாங்க..!

SJB r

திர்கால எடப்பாடிகளே..! பிற்கால பன்னீர்செல்வங்களே..!”ன்னு ஆசை காட்டினா போதும்.

ரமேஷ்.

ருக்குறதே கொஞ்சம் பேரு... பெரிய வீடா பார்த்து கூடவே வெச்சுக்கலாம்..!

நெல்லை அண்ணாச்சி

‘அமமுக நிழல் சட்ட மன்றம்’ என்ற ஒன்றைத் தனியே ஆரம்பித்து, டிடிவி நிழல் முதல்வராகவும் தொண்டர்களை ஆன்லைனில் ‘நிழல்’ அமைச்சர்களாகவும் பதவி ஏற்கவைத்து நிஜ சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தைப் போல் வழங்கித் தக்கவைக்கலாமே!

Kanniya Kumar

ட்சின்னு ஒண்ணு இருந்தாதானே ஆட்களைத் தக்க வைக்கணும்... கட்சியையே கலைச்சிட்டா..?

laks veni

சின்னம்மா சபதம் செஞ்ச வீடியோவைப் போட்டுக்காட்டி மன ரீதியா கட்சிக்காரர்களைத் தாக்குதல் நடத்தித் தக்க வைக்கலாம்!

நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

னி ஒருவன் படத்துல மாதிரி கட்சி நிர்வாகிகள் அனைவரின் உடம்பிலும் ‘சிப்’ ஒன்றைப் பொருத்திக் கண்காணிக்கலாம்.

வைகை சுரேஷ்

? விஜய் ஹீரோ... விஜய் சேதுபதி வில்லன்... இந்தப் படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

வாசகர் மேடை

விஜய நகரம்

டி.செல்லதுரை, மாடம்பாக்கம், சென்னை

ர்க்காரும் ரௌடிதான்!

பி.என். நரசிம்ஹா மூர்த்தி,

குருவியும் பறந்துபோகும்.

Mr. அ ல் லு

டுவுல கொஞ்சம் - கத்தி - பேசுவோம்

Jerry.D.Darvey

ஷாஜகானும் 96 காதலர்களும்

பாலசுப்ரமணி

பிரியமுடன் பீட்சா...

PrabuG

திருப்பாச்சி பண்ணையார்

Saravanan M

புள்ளைங்கோ

ivan_pradhap instagram

? ரவிசாஸ்திரிக்குப் பதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராகலாம் என்றால் அவர் யார்? ஏன்?

ஆர்.ஜே.பாலாஜி - கமென்ட்ரியில் பேசியே கொல்வதுபோல், கோச்சாக, பேசியே வீரர்களை விளையாட வைத்துவிடுவார்.

இரா.கமலக்கண்ணன்

மிழிசை - விக்கெட் வீழ்ந்தே தீரும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

ஹர்ஷாபா

மல்ஹாசன் - தோல்விக்குக் காரணம் கேட்டா, புரியாத மாதிரி பேசிக் குழப்பி அடிக்கக் கற்றுக்கொடுப்பார்.

அ.ரியாஸ்

ஜினிகாந்த் - ஏன்னா... அவர்தானே ‘கோச்’சடையான்..?

மயக்குநன்

டி.ராஜேந்தர்தான் சரியான கோச். அடுக்குமொழி பேசியே ஆட வெச்சிடுவார்.

ஒழுங்கா ஆடுங்கடா கிரிக்கெட்டு

இல்லாட்டிப் போய்டும் விக்கெட்டு!

அடிக்கடி அடிடா ஃபோரு

அப்பத்தான் ஏறும் ஸ்கோரு!

சிக்ஸர் அடிச்சாதான் கோலி

இல்லாட்டி நீ காலி!

பா. பிரபாகரன்

டப்பாடி ஓபிஎஸ் -

காலில் விழுந்தாவது கப் வாங்கிடுவாங்க!

ராஜ்மோகன்

தீபா - அவங்களுக்கு எல்லாம் விளையாட்டுதான்.

ஹர்ஷாபா

ஹெச்.ராஜா - மிகச்சிறந்த பயிற்சியாளர் என்பதைவிட, தோற்றாலும் ஜெயித்தாலும் சொல்லும் காரணம் மிகச்சிறப்பாக இருக்கும்.

Anbu Bala

ஓ.பி.ரவீந்திரநாத் குமார்... ‘தேனியின் தோனி’ எனும் அடைமொழியுடன் திகழ்வதால்..!

பாமரன் பரமகுரு

நிர்மலா சீதாராமன் - மேட்ச்ல தோத்துப்போனாக்கூட, “கபடில ஆரம்பிச்சு புட்பால் வரைக்கும் பிரிமியர் லீக் நடத்து றதாலதான் கிரிக்கெட்ல ஜெயிக்கமுடியல”ன்னு அறிவுபூர்வமா விளக்கம் கொடுப்பாரு..!

ரமேஷ்.ஏ

‘காலை வணக்கம் உறவே’ மாதிரியான காலாவதி கமென்ட்களை இன்னமும் பயன்படுத்துபவர்களுக்கு ஜாலியாக என்ன தண்டனை கொடுக்கலாம்?

டேங்கர் லாரி வந்தால் ஒரு குடம் தண்ணீர் பிடித்துத் தரச் சொல்ல வேண்டும்.

மு.ரா.பாலாஜி , கோலார் தங்க வயல்

ரதப் பழசான பட்டன் போனை ஒரு வருஷத்துக்குப் பயன்படுத்தணும்னு தண்டனை கொடுக்கலாம்.

அவ்வை கே.சஞ்சீவிபாரதி, கோபி, ஈரோடு

ராத்திரி எது பகல் எதுன்னே தெரியாத இடத்துக்குப் புடிச்சிட்டுப் போய் விட்டுறணும், பொறவு எப்படி காலை மாலை வணக்கம்லாம் சொல்லுவாங்க...

Shanmuga Nathan

பா.ஜ.க-வுல சீட்டு கொடுத்துத் தமிழ்நாட்டில் நிக்க வைக்கலாம்.

வைகை சுரேஷ்

சிம்புவ கரெக்ட் டயத்துக்குப் படப்பிடிப்புக்கு அழைத்துவர வேண்டிய பொறுப்பைக் கொடுத்தால் அதுவே தண்டனைதான்.

Sathia Moorthi

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்திலிருந்து பத்துத் திருக்குறள் சொல்லச் சொல்லணும்.

ஜோக்கர்

மல்ஹாசனுடைய டிவிட்டர் அட்மின் ஆக்கலாம். நம்மாளுக்கு ஒரு பொழப்பும் ஆச்சு... நம்மாளோட தமிழுக்குத் தீனியும் ஆச்சு...

வெங்கடேஷ்

மூக வலைதளங்களில் ரசிகர் சண்டை, கமென்ட் ஃபுல்லா ஒண்ணு விடாம வாசிக்க வைக்கணும்.

Karthika

? நம் ஃபாரின் முதல்வர் எடப்பாடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்?

வாசகர் மேடை

ட்ரம்ப் : என்ன மாம்ஸ் இந்தப் பக்கம்..?!

எடப்பாடி : ஃபேக்டரி விசிட் மச்சி...

ட்ரம்ப் : டயர் கம்பெனிதானே..? கலிபோர்னி யால இருக்கு.

எடப்பாடி : பாத்தியா நீயும் கலாய்க்கிற...

ட்ரம்ப் : ஹேய்... ஜஸ்ட் எ ஜோக்யா...

பொம்மையா முருகன்

டப்பாடி : சென்னைக்கும் சிகாகோவிற்கும் எட்டுவழிச்சாலை போடும் விசயமா உங்க கிட்ட பேச வந்திருக்கேன்!

ட்ரம்ப் : அதெப்படி மேன் முடியும் ? இடையில் கடல் பகுதி அதிகமாச்சே!

எடப்பாடி‌: “அப்போ ஆகாயமார்க்கமா போடலாமே!”

இளையநிலா

டப்பாடி: தேங்க் யூ ட்ரம்ப்ஜீ... பஃபல்லோ கால்நடைப் பண்ணையில நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டோம்..!

ட்ரம்ப்: ஓ ஐ ஸி... ‘பஃபல்லோ’வுல நடக்கிறதை நீங்க தெரிஞ்சிக்கிட்ட மாதிரி, ‘அப்போலோ’வுல நடந்ததை நா தெரிஞ்சிக்கலாமா..?

மயக்குநன்

டப்பாடி : லாஸ் ஏஜென்டுக்கு ஒரு ரவுண்டு போகலாமா?

ட்ரம்ப்: அது லாஸ் ஏஜென்ட் இல்ல. லாஸ் ஏஞ்சல்ஸ்.

எடப்பாடி: லாஸ் ஏஜென்ஸ்.

ட்ரம்ப்: ஐயோ... அது லாஸ் ஏஞ்சல்ஸ்.

எடப்பாடி: இப்ப கரெக்டா சொல்றேன், லாஸ் ஏஜெல்ஸ்.

ட்ரம்ப்: லாஸ் எங்கல்ஸ்... ஐயோ என்னையே குழப்பிட்டீங்களே..!

ரஹீம் கஸ்ஸாலி

ட்ரம்ப்: எப்படியும் அடுத்த தேர்தலில் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நினைப்பில்தான் என் இஷ்டப்படி ஆட்சிசெய்கிறேன்.

எடப்பாடி: எப்படியும் அடுத்த தேர்தலில் என்னைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற நினைப்பில்தான் ஆட்சி செய்கிறேன். ஆனால் என் இஷ்டப்படியெல்லாமில்லை...

புகழ்

டப்பாடி : ஹலோ ட்ரம்ப்ஸ்...

ட்ரம்ப் : ஹாய் எடுப்ஸ்...

Saravanan M

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க! உங்கள் கடிதம் மிஸ் ஆகிறது என்கிற சந்தேகமா ? இனி வாசகர்மேடை பகுதிக்கு நீங்கள் vasagarmedai@vikatan.com என்னும் ஈமெயில் முகவரிக்கு உங்கள் பதிலை அனுப்பலாம்.

  • ? வடிவேலு, சந்தானம், சூரி எல்லோருமே கதாநாயகர்கள் ஆகிவிட்டார்கள். மூன்று ஹீரோக்களும் ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

  • ? 90ஸ் கிட்ஸ் போல, 80ஸ் கிட்ஸ் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன ?

  • ? காதலுக்கு இதயம், தாஜ்மகால் என்று எத்தனையோ சின்னங்கள் இருக்கின்றன. காதல் தோல்விக்குச் சின்னம் உருவாக்குவது என்றால் எதைச் சின்னமாக்கலாம்?

  • ? ‘உலகத்தின் கடைசி மனிதனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது’ - காலங்காலமாக ஒற்றைவரி சிறுகதைக்குச் சொல்லப்படும் உதாரணம். எங்கே நீங்கள் ஒரு புதிய ஒற்றைவரி சிறுகதை சொல்லுங்களேன்!

  • ? இப்போதைய தமிழக அமைச்சர்கள் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்? ஏன்?

வாசகர் மேடை

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.