Published:Updated:

கடலுக்கு அடியில் சுற்றுலா பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்; கைது செய்து விசாரிக்கும் போலீஸ்!

நீருக்கு அடியில் முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்...

கோவிட் -19 தொற்றின் தாக்கத்தில் இருந்து சுற்றுலாத்துறை மீண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் குறிப்பாக செம்போர்னா மாவட்டத்தின் சுற்றுலா பிம்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றன .

24 வயது சீன பெண் சுற்றுலா பயணியை, மலேசிய டைவிங் பயிற்சியாளர் கடல் நீருக்கு அடியில் முத்தமிட்டு இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், 27 வயதான ஃப்ரீலான்ஸ் பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மலேசியாவின் செம்பொர்னா (Semporna) மாவட்டத்தில், வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது.

அந்தப் பதிவில், சீனப் பெண்ணும், டைவிங் பயிற்சியாளரும் பேசிக் கொள்ளும் புகைப்படங்களும், பயிற்சியாளர் முத்தமிட்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

கடலுக்கு அடியில் சுற்றுலா பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்; கைது செய்து விசாரிக்கும் போலீஸ்!

``பாதிக்கப்பட்ட பெண் சீனாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன்பு, செம்போர்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்நபர் அவரின் வீட்டில் கைது செய்து செய்யப்பட்டார். அவர் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 354 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்'' என உதவி காவல் கண்காணிப்பாளர் ஆரிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

``சுற்றுலாத்துறை கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் இது போன்ற சம்பவங்கள் குறிப்பாக செம்போர்னா மாவட்டத்தின் சுற்றுலா பிம்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றன'' என சபா (Sabah) மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிறிஸ்டினா லியூ திங்களன்று தெரிவித்துள்ளார்.