Published:Updated:

`சிறந்த நண்பர்களாக இருப்போம்' - கணவரோடு சேர்ந்து விவாகரத்துக்குப் பதிவுசெய்த ஃபின்லாந்து பிரதமர்!

பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

``19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம்" - சன்னா மரின்

Published:Updated:

`சிறந்த நண்பர்களாக இருப்போம்' - கணவரோடு சேர்ந்து விவாகரத்துக்குப் பதிவுசெய்த ஃபின்லாந்து பிரதமர்!

``19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம்" - சன்னா மரின்

பின்லாந்து பிரதமர் சன்னா மரின்

ஃபின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரின் (Sanna Marin), தன்னுடைய கணவர் மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்திற்குப் பதிவு செய்திருக்கிறார்.  

37 வயதான மரின், 2019-ம் ஆண்டில், ஃபின்லாந்தின் பிரதமராகப் பதவி ஏற்றார். உலகின் மிக இளம்வயது பிரதமர் என்ற அங்கீகாரம் இவருக்குக் கிடைத்தது. வளர்ந்து வரும் புதிய தலைவர்களில் இவரும் பலருக்கு முன்மாதிரியாக விளங்கினார். மரினுடைய சமூக ஜனநாயகக் கட்சி கடந்த மாதம் ஃபின்லாந்தின் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

Divorce
Divorce
Pixabay

மரினுக்கும், மார்கஸுக்கும், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில் தங்களுடைய மூன்று வருட திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் .    

இது குறித்து தங்களுடைய தனித்தனி இன்ஸ்டாகிராம் பதிவில், ``19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமைப் பருவத்தில் ஒன்றாக வாழ்ந்தோம், ஒன்றாக முதிர்ச்சியடைந்தோம், எங்கள் அன்பான மகளுக்கு ஒன்றாகப் பெற்றோராக வளர்ந்தோம்’’ எனப் பதிவிட்டுள்ளனர்.