
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது
அவள் விகடன் 14.2.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“டவுன் பஸ்ல மட்டும்தான் மகளிருக்கு இலவச டிக்கெட். அதுக்காக கும்பகோணத்துலேர்ந்து சென்னை வரைக்கும் டவுன் பஸ்ல மாறி மாறி போன்னு சொல்றீங்களே... அது நியாயமா!?”
- கார்த்திகா மூர்த்தி, கும்பகோணம்
***
“ஏங்க... இது நம்ம பேக் இல்லைங்க...”
“எடுக்கும்போதே நினைச்சேன். எடுக்க சுலபமா இருக்கேன்னு.”
- எஸ்.ரஸிதா பீவி, நாகர்கோவில்
***
“எதுக்குடி வேட்டியைக் கழட்டச் சொல்றே...”
“நம்ம ஊர் பஸ் அங்கே நிக்குது. மசமசன்னு நிக்காம, வேஷ்டிய கழட்டி மொத்த குடும்பத்துக்கும் இடம் போடுங்க...”
- இரா.அனுசூயா, நிலக்கோட்டை
***
“சொன்னா கேளுய்யா... ஆண்களுக்கும் பஸ்ல இலவசம்னு அரசு சொன்ன பிறகுதான் ஊருக்கு வருவேன்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம்
கூட நல்லாயில்லை!”
- சத்யா சோமசுந்தரம், சென்னை-129
அவள் விகடன் 14.2.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“கடைக்காரரே... சர்க்கரை கம்மியா கரும்பு
ஜூஸ் வேணும்னு எங்க பாட்டி கொடுத்த
கரும்பு இது... போட்டுக்கொடுங்க...”
- ஆர்.கீதா, ஆலுவா, கேரளா
*****
“பசங்களா, கரும்பை குடுங்க... ஜூஸ் எடுத்துத் தர்றேன்!”
“இது பன்னீர் கரும்புங்க...
பன்னீர் எடுத்து தாரேன்னு
சொல்லுங்க. தர்றோம்!”
- எஸ்.சாந்தி, சென்னை-129
*****
“கரும்பிலிருந்து சர்க்கரை வருதுங்கிறது நிஜம்தான். அதுக்காக இந்தக் கரும்பை வச்சிகிட்டு, ரெண்டு கிலோ சர்க்கரை யெல்லாம் தர முடியாது....”
- கா.சு.ஜெயலட்சுமி, பொள்ளாச்சி
***
“ரேஷன்ல கொடுத்த இலவச கரும்பை இலவசமா ஜூஸ் போட்டுக் கொடுங்கன்னு கேட்கறது நியாயமில்லை கண்ணுங்களா...”
- ஜானகி சுப்பிரமணி, சென்னை-20

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்கு களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 21.2.2023