
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது
அவள் விகடன் 11.4.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக்,
வண்டி இன்ஷூரன்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கே... அப்புறம் எதுக்கும்மா எங்களைப் பார்த்து நடுங்குற?”
“பணம் கொண்டு வர மறந்துட்டேன் சார்!”
- கீதா கிருஷ்ணரத்னம், சென்னை-103
“ரெண்டு பேரும் என் பக்கத்துல வந்து கேஸ் போடற மாதிரி நில்லுங்க சார்.
அதை செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போட்டா சீக்கிரம் பாப்புலர் ஆயிடுவேன்.”
- ஜானகி சுப்பிரமணி, சென்னை-20
“நாங்க ஒரிஜினல் போலீஸ் இல்லைன்னு எப்படிம்மா கண்டுபிடிச்சே?’’
“ஆயிரம் ரூபாய் ஃபைனுக்கு பதிலா
நூறு ரூபாய் கேட்குறீங்களே!”
- பி.ராஜேஸ்வரி, மதுரை-1

“எதுக்குடி எல்லா பக்கத்தையும் போட்டோ எடுத்துட்டிருக்கே?’’
“ஆன்லைன் கிளாஸ் வந்த பிறகு புக்குல படிக்க கஷ்டமா இருக்குதும்மா, போட்டோ எடுத்து போன்லயே படிச்சுக்கறதுதான்
ஈஸியா இருக்கு!''
- பா.ஜோதிமணி, திருப்பூர்
“படிக்காம ஏன் செல்போனை நோண்டிக்கிட்டு இருக்கே?”
“நீ தானேம்மா சொன்ன... வெண்டைக்காய் சாப்பிட்டா, கணக்கு நல்லா வரும்னு... அதான் தமிழ், ஆங்கிலம், சயின்ஸுக்கெல்லாம் என்ன காய் சாப்பிடணும்னு கூகுள்ல தேடிக்கிட்டு இருக்கேன்!”
- சத்யா சோமசுந்தரம், சென்னை-129
“எப்ப பாரு செல்போனும் கையுமா...
இந்த தொல்லை பிடிச்சதை யார்தான்
கண்டுபிடிச்சாங்களோ...”
“ரெண்டு நிமிஷம் நில்லும்மா... செல்போன் மூலமா கூகுள்ல பார்த்துச் சொல்லிடுறேன்.”
- என்.மகாலட்சுமி, சிதம்பரம்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 18.4.2023