லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 9.5.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம்.வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

``காலையில சொன்னதைவிட, மதியம் கூடுதலா விலை சொல்றீங்க?''

``காலையில இருந்ததைவிட, இப்ப கூடுதலா வெயில் அடிக்குதே!''

- எஸ்.ரஸிதா பீவி, நாகர்கோவில்

``மண்பானையில ஜூஸை வியாபாரம் பண்ணுறது சரி. அதுக்காக `இதெல்லாம் கீழடியில எடுத்த சங்ககால மண்ணுல செஞ்ச ஸ்பெஷல் பானைகள்'னு சொல்றதுதெல்லாம் ரொம்ப ஓவர்."

- ஜானகி சுப்பிரமணி, சென்னை-20

``எதுக்கு பானையிலே ஜூஸ் விக்கறீங்க?''

``உங்களை மாதிரி 'மாடர்ன் டைப்' ஆளுங்களெல்லாம், இப்படி `ஓல்டன் டைப்'ப எடுத்துவிட்டாத்தானே ஓடி வர்றீங்க.''

- மு.மைதீன் பீவி, தூத்துக்குடி

அவள் விகடன் 9.5.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

“யோவ்... தண்ணி லாரின்னதும் தப்பா நினைச்சி மேலே ஏறி ரகளை பண்ணாதே. இது, குடிதண்ணி லாரி!”

- ஜி.ரிஹானா பர்வீன், வேலூர்

``பொம்பளைங்களுக்கெல்லாம் லாரியில தண்ணி சப்ளை பண்றது போலவே, எங்களுக்கெல்லாம் `சரக்கு' சப்ளை பண்ணணும். அதுவரைக்கும் வண்டியை விட்டு நான் இறங்க மாட்டேன்.''

- எம்.புஷ்பராணி, தஞ்சாவூர்

``யோவ் `தண்ணி வண்டி' உனக்கு இதே வேலைய போச்சுது. பொம்பளைங்க கூட்டத்தை பார்த்தா... லாரினும் தெரியாது, மேடைனும் தெரியாது. மேல ஏறி முழங்க ஆரம்பிச்சிடுவே. முதல்ல கீழ இறங்கு!''

- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரை யில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுர மாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 16.5.2023