லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 23.5.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``என்னடி கையில ஐஸ்க்ரீம் வச்சுக்கிட்டு இவ்வளவு சந்தோஷமா இருக்க..?''

``நான் உன்னோட அம்மான்னு நெனச்சு... `மதர்ஸ் டே'க்கு ஃப்ரீயா கொடுத்துட்டாங்க.''

- சுப்புலட்சுமி சந்திரமெளலி, சென்னை-91

***

``என்னடி வெறும் குச்சியை வாங்கிட்டு வர்றே..?''

``ரிவ்யூ பண்ண குச்சி ஐஸ் கேட்டதுக்கு `சாப்பிட்டுட்டேன்... நல்லாயிருந்ததுன்னு ரிவ்யூ பண்ணுங்க'ன்னு குச்சியை மட்டும் கொடுத்துட்டாங்க..!''

- ஜானகி சுப்பிரமணி, சென்னை-20

***

அவள் விகடன் 23.5.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``என்ன பாட்டி வண்டியிலேர்ந்து இறங்கிட்டீங்க..?''

``இப்படி நடந்தே போனா ஊட்டிக்கு இருபது நிமிஷத்துலே போயிடலாம். வண்டியிலே போனா ரெண்டு மணி நேரத்துக்கும் மேல ஆகும். பயங்கர டிராபிக் ஜாம்..!''

- எஸ்.ரஸிதா பீவி, நாகர்கோவில்

``பாட்டிமா.. நீங்க தினமும் காலையில் வாக்கிங் போவீங்கங்கறது நல்ல விஷயம்தான்... அதுக்காக டூருக்கு வந்த இடத்துலயும்

நாலு கிலோமீட்டர் தூரம் நடந்த பிறகுதான் பஸ்ல ஏறுவேன்னு அடம்பிடிச்சா எப்படி..?’’

- எம்.கலையரசி, சேலம்.

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரை யில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுர மாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 30.5.2023