
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது
அவள் விகடன் 14.3.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

‘`சா...ர்... மெனுகார்டை சரியா படிச்சு பாக்காம ஆர்டர் கொடுத்துட்டு, இப்ப அது உப்புமான்னு தெரிஞ்சதும் போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டு ஒளிஞ்சிக்கிறது எந்த விதத்தில் சார் நியாயம் சா...ர்...’’ - எம்.கலையரசி, சேலம்
``12-பி பாலு சார்... காரிடார்ல சுத்திட்டிருக்கற உங்க அல்சேஷனைக் கட்டிப்போட்டுட்டு அந்த போட்டோவை எனக்கு உடனே வாட்ஸ்அப் பண்ணுங்க. அப்பத்தான் நீங்க ஆர்டர் பண்ணினதை டெலிவரி பண்ண முடியும்!’’ - கோமதி வைத்தியநாதன், மதுரை-14
“அரை மணி நேரமா சார்... சார்னு கத்திக்கிட்டிருக்கேன், மாடியிலிருந்து ஒருத்தர் கூட எட்டிப் பார்க்கலையே?”
“இது லேடீஸ் ஹாஸ்டல்பா!” - கே.ஆர்.வசந்தகுமாரி, சென்னை-1

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்கு களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 21.3.2023