தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 25.4.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``என்னப்பா போர்டுல ஒண்ணுமே எழுதாம இருக்கு?''

``பெயின்ட் வாங்கறதுக்கு, பட்ஜெட்ல இன்னும் நிதி ஒதுக்கலையாம்!''

- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி

``எதுக்குய்யா எங்க ரெண்டு பேரையும் அப்படி பாக்கிற?''

``பக்கத்துல எங்க தலைவர் ரயில் மறியல் போராட்டம் பண்றார்... ரெண்டு ஆளு குறையுது... அதான்!''

- சத்யா சோமசுந்தரம், சென்னை-129

``என்ன இது... கைகாட்டி போர்டுல எழுத்தையே காணோம்?!''

``இது 'கைநாட்டு' போர்டுங்க!''

- பி.திலகவதி, தஞ்சாவூர்

அவள் விகடன் 25.4.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``என்னமோ பொதி மூட்டை மாதிரி டெய்லி உன் ஸ்கூல் பையை சுமக்க வேண்டியிருக்குன்னு சலிச்சிக்கிட்டியே பாட்டி, இப்ப பாத்தியா உன்னோட `கூன்' ஒரே வாரத்தில நேராயிடுச்சு!''

- எஸ்.சாந்தி, சென்னை-129

``வடாம், வத்தலை காவல் காக்க மொட்டை மாடிக்கு போறதுக்கு இவ்ளோ பில்டப்பா... அப்பத்தா!''

- என்.கோமதி, நெல்லை-7

``நீ டீச்சரா வேலை பார்த்த ஸ்கூலா இருக்கலாம். அதுக்காக என்னை ஸ்கூல்ல விட வரும்போதெல்லாம் கூலிங் கிளாஸ், ப்ளூடூத் ஹெட்போன் போட்டுட்டுதான் வருவேன்னு அடம்பிடிக்கறது டூ மச் பாட்டி!''

- ஆர்.இந்துமதி, மன்னார்குடி

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழி யுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 2.5.2023