உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

தல-தளபதி இணைந்து மிரட்டும்...

தல-தளபதி இணைந்து மிரட்டும்...
பிரீமியம் ஸ்டோரி
News
தல-தளபதி இணைந்து மிரட்டும்...

தல-தளபதி இணைந்து மிரட்டும்...

தல-தளபதி இணைந்து மிரட்டும்...

ல-தளபதி படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலே சோஷியல் மீடியா முழுவதும் தீப்பற்றி எரியும். இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நடித்தால் என்னாகும் என மல்லாக்கப் படுத்து மலங்க மலங்க யோசித்ததில்...

*
எப்படியும் படம் ரிலீஸாகி பத்துப் பதினைந்து நாட்களுக்கு எல்லா தியேட்டரும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்குமென்பதால், ஆந்திரா பார்டருக்குச் சென்று ‘நவ் வாட்ச்சிங்’ ஸ்டேட்டஸோடு குரூப்பி எடுத்து அதகளம் பண்ணுவார்கள்.

* தியேட்டருக்கு மொத்தம் எத்தனை வாசல் இருந்தாலும் போதாது. அதனால் ட்ரைவ் இன் போல வெட்டவெளியில் திரையை வைப்பது நலம். இல்லாவிட்டால் சுவர் இடிவது உறுதி. ரசிகர்களின் அட்ராசிட்டியில் திரை கிழியாமல் இருக்க, புல்லட் ப்ரூஃப் கண்ணாடி அமைக்க தியேட்டர் நிர்வாகம் நிதி ஒதுக்கியே ஆக வேண்டும்.

* போஸ்டர்களுக்கு நடுவே தியேட்டர் எங்கே இருக்கிறது என்பதைச் சரியாகக் கண்டறியும் ரசிகர்களை ஊக்குவிக்க தல-தளபதி கையெழுத்திட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என விநியோகஸ்தர்கள் கோக்குமாக்காக விளம்பரப்படுத்தலாம்.

* பொதுவாகவே 100, 200 அடிகளில் கட் அவுட் வைப்பது இவர்களது ரசிகர்களின் பழக்கம். இந்தப் படத்திற்கு கிலோமீட்டர் உயரத்திற்கு ராட்சத கட் அவுட்கள் வைப்பார்கள். கட் அவுட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று குடங்களைக் கவிழ்த்து பாலபிஷேகம் செய்வார்கள் ரசிக சிகாமணிகள்.

* ஒவ்வொரு முறையும் படம் ரிலீஸாகும்போது 500 கோடிடாவ்வ்வ்... 1000 கோடிடாவ்வ்வ்... என ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வது சகஜம். இந்த முறை நிஜமாகவே அவ்வளவு வசூலானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தல-தளபதி இணைந்து மிரட்டும்...

* வழக்கம்போல ஆன்லைனில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து அசமந்தமாக இருந்தால் அது வேஸ்ட். தியேட்டர் பிரின்ட்டில் ஒரு மாதத்திற்கு விசில் சத்தமும், கைத்தட்டல் சத்தம் மட்டும்தான் பதிவாகியிருக்கும். போதாக்குறைக்கு திரைக்கு முன்னால் ரசிகர்கள் போட்ட குத்தாட்டமும் கண் முன்னால் வரும்.

* படத்தின் தயாரிப் பாளர்கள் அடுத்த பட்ஜெட்டின்போது தமிழக அரசின் கடன் பற்றாக் குறையை ஈடுகட்ட நிதி உதவி அளிக்கும் அளவுக்கு வசதியாகியிருப்பார்கள். ப்ரொமோசனுக்காக நாசா வின் செயற்கைக் கோளில் படத்தின் போஸ்டர் ஒட்டி செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்புவார்கள்.

* ஒண்ணே ஒண்ணுதான் பிரச்னை. ட்விட்டரில் மொத்தம் இருக்கும் 140 கேரக்டரில் இவர்கள் #VijayAjithMassForeverTheyAreTheBoxOfficeKingsInKollywoodNoOneCanMessWithThemWeAreTheirArmy என ஆரம்பித்து மானிட்டர் முழுவதும் மறையும்படி டேக் போட்டுத் தள்ளி உலக ட்ரெண்ட்டில் முதலிடத்திற்கு கொண்டுவந்து விடுவார்கள். இதைப்பார்த்து அமெரிக்கத் தேர்தலில் இவர்களின் ரசிகர் மன்ற ஆதரவு பெற்ற வேட்பாளர் எனப் பிரசாரம் நடந்தாலும் நடக்கலாம்!

-கருப்பு