உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

இதெல்லாம் நம்பாதீங்க!

இதெல்லாம் நம்பாதீங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
இதெல்லாம் நம்பாதீங்க!

இதெல்லாம் நம்பாதீங்க!

இதெல்லாம் நம்பாதீங்க!

விஜய்யும் அஜீத்தும் அவங்க படங்களில் எவ்வளவு குறியீடுகள் சொல்லியிருக்காங்க. எப்போவாச்சும் கவனிச்சுருக்கோமா பாஸ்?

* ‘குருவி’ படத்தில் பல்லாலே கார் ஆக்ஸிலேட்டர் வொயரைக் கடிச்சு கன்ட்ரோல் பண்ணி அந்த ரேஸ்லேயும் கடைசியில் ஜெயிச்சுடுவாரு விஜய். இதிலிருந்து என்ன சொல்ல வராங்கனா, உன்னோட வாயிலதான் எல்லாமே இருக்கு. அதைச் சரியாக கன்ட்ரோல் பண்ணி ஒழுங்கா ஓடினா, வாழ்க்கைங்கிற ரேஸ்ல  வெற்றி உனக்குதான்னு சொல்ல வராங்க.

* ‘வேலாயுதம்’ படத்தில் ஓடிவந்து எல்லோரையும் பயமுறுத்தி அரிவாளால் ரயில் சீட்டை வெட்டி சீட் பிடிப்பார் விஜய். இது எதுக்கான குறியீடுனா, ஒரே ஒரு சீட்டு பிடிக்கிறதுக்காக நம்ம அரசியல்வாதிகள் எவ்வளவு வன்முறைகள், அக்கப்போருகள் பண்றாங்கங்கிறதை சிம்பாலிக்கா சொல்றது.

* அஜீத் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்தில் வில்லன் குரூப் விஷம் கொடுத்துக் கொல்வாய்ங்க. ஆனா நயன்தாரா மட்டும் சாக மாட்டாங்க. நம்ம ஊரில் சில கடைகளில்  பாய்சன்கள்கூட எக்ஸ்பைரி ஆனவைகளாக, போலியானவைகளாகதான் விற்கப்படுத்துங்கிறதைத் தோலுரித்துத் தொங்கவிட்டிருக்காங்க.

இதெல்லாம் நம்பாதீங்க!

* ‘கத்தி’ படத்தில் வில்லன்களை எப்படி அடிக்கிறதுனு தெரியாம தடுமாறுவார் விஜய். கடைசியில் கையில் வெச்சிருக்கிற சில்லறைக்காசை சதீஷ்கிட்ட கொடுத்து தூக்கிப்போடச் சொல்லி பிளான் பண்ணி அடிப்பார். இது மூலமா என்ன சொல்றாங்கனா நம்ம நாட்டில் கரெக்டா காசைத் தூக்கிப் போட்டா, எந்த வேலையானாலும் உடனே முடிஞ்சிடும்கிறதைத்தாங்க அடிச்சு சொல்றாங்க.

* ‘கில்லி’, ‘குருவி’ படங்கள்லாம் பல சீன்கள்ல ஊருவிட்டு ஊரு, மாடிவிட்டு மாடி அசால்ட்டா தாவுவார் விஜய். தமிழ்கூறும் நல் உலகுக்கு இதனால என்ன சொல்ல வரார்னா, இலக்குகள் எவ்வளவு தூரம் இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படவே கூடாது. தாண்டிப் போய்கிட்டே இருக்கணும்கிறதைதான் தத்துவமாக வலியுறுத்திச் சொல்றாரு.

-ஜெ.வி.பிரவீன்குமார்