உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

கலாய்க்கிறாங்களாமாம்!

கலாய்க்கிறாங்களாமாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலாய்க்கிறாங்களாமாம்!

கலாய்க்கிறாங்களாமாம்!

மூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் அஜீத்தைக் கலாய்க்கவும், அஜீத் ரசிகர்கள் விஜய்யைக் கலாய்க்கவும் புதுவிதமான ஒரு யுக்தியைக் கையாண்டு வருகிறார்கள். அது என்னன்னா, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தன்னை அஜீத் ரசிகன் எனக் காட்டிக்கொண்டு அஜீத்தைப் புகழ்வது போலவே கரியை அள்ளிப்போட்டுக் காலி செய்வார்கள். அதேபோல் அஜீத் ரசிகர்களும் விஜய்யைப் புகழ்வதுபோல் செமத்தியாய் கிச்சுகிச்சு மூட்டுவார்கள். சாம்பிளுக்கு கொஞ்சம் இந்தாங்கோ... குறும்புக்காரங்கப்பா இந்த தல-தளபதி ரசிகர்கள்.

கலாய்க்கிறாங்களாமாம்!

விஜய் ரசிகர்கள்:

ஜீத்- வாழும் கலைஞர், வளரும் பெரியார், வடிவில் சிவாஜி, வனப்பில் எம்.ஜி.ஆர், உயர்வில் கமல், ஈர்ப்பில் ரஜினி, ஈகையில் கர்ணன்.

A- Abdul kalam , J- John cena, I- Ilangovadigal, T- Tendulkar, H- Hulk. தல இஸ் தி மிக்ஸ் ஆஃப் ஆல் லெஜென்ட்ஸ்.

‘ஃப்ரெண்ட்ஸ், ஐ யம் ஸோ ஹேப்பி. இன்னைக்கு தலயின் ஹெலிகாப்டர் எங்க வீட்டுக்கு மேல இரண்டுமணி நேரமா ரவுண்டு அடிச்சுச்சு. அதனால், நான் வெளியே போய்ப் பார்த்தேன். தல ஹெலிகாப்டரில் இருந்து எட்டிப் பார்த்தார். அப்புறம் ஹார்ன் அடிச்சார். கிளம்பிவிட்டார். இனி எப்போ வருவார்னு தெரியலை!’

  அஜீத் ரசிகர்கள்:

ந்தியாவின் சிறப்பம்சங்கள்: தேசியப் பறவை - மயில், தேசிய விலங்கு - புலி, தேசிய மலர் - தாமரை, தேசிய விளையாட்டு - ஹாக்கி, தேசிய ஹீரோ - விஜய். காலரைத் தூக்கிவிட்டுச் சொல்வோம்டா தளபதி ரசிகன்னு. இந்த ‘இந்தியா’வில் தளபதி இல்லைனா எவனுமே இல்லை.

திட்டமிட்டு மறைக்கப்பட்ட உண்மை: ‘ஜில்லா’ மற்றும் ‘தலைவா’ படத்திற்காக விஜய் அண்ணாவுக்கு ஆஸ்கர் விருது தரப்பட்டது. அவர் சிறந்த நடிகர் (ஜில்லா), சிறந்த பாடகர் (வாங்கணா வணக்கங்ண்ணா...), சிறந்த பொழுதுபோக்காளர் போன்ற விருதுகளை வென்றார். ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு ஆஸ்கர் விருது வெல்லும் இரண்டாவது இந்தியர் விஜய் அண்ணாதான். விருதைப் பெற்ற பின்பு பேசிய விஜய் ‘இந்த விருதை, நான் என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகப் பெருமக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ எனப் பேசினார். அவர் ரசிகனாய் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

தொகுப்பு: ப.சூரியராஜ்