உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

 படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்பவர்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?

சிவசக்தி வேல்: அமெரிக்கத் தேர்தலுக்கே ஐடியா கொடுக்கிற ஊர்ல இருந்துட்டு இதைக்கூட பன்ணலைனா எப்படி பாஸ்?

வைத்தீஸ் மாரியப்பன்: தியேட்டர்லேயா, தமிழ் ராக்கர்ஸ்லேயா விவரமா சொல்லுங்கய்யா.

மணிகண்டன்:
படம் பார்க்கிற அளவுக்கு அவங்களுக்கு வசதி இல்லைனு தோனும்.

கோபிநாத்:
காசு செலவு பண்ணாம நாலு பேரைக் காப்பாத்துற புண்ணியவான்.

பதில் சொல்லுங்க பாஸ்!

மொக்கைக்கும், காமெடிக்கும் இடையேயான வித்தியாசங்களைச் சொல்லுங்க ட்யூட்ஸ்...

அருண் ஆதித்: ஒருத்தன் ஒரு காமெடி சொல்லி அதைக்கேட்டு மத்தவங்க சிரிச்சா அது காமெடி. காமெடி சொல்லி மத்தவங்க சிரிக்காம, சொன்னவன் மட்டுமே சிரிச்சா அது மொக்கை.

ரவி:
ஒரு காமெடி சம்பவம் நம்மை வெச்சி நமக்கு நடந்தா, அது மொக்கை. அதுவே நம்மைச் சுற்றி உள்ளவங்களுக்கு நடந்தா, அதுதான் செம காமெடி.

அருண்: டைமிங்தான் பாஸ் வித்தியாசம்.

வைத்தீஸ் மாரியப்பன்: பொண்ணுங்க டப்ஸ்மாஷ் பண்ணினா மட்டும் காமெடி. ஆண்கள் டப்ஸ்மாஷ் பண்ணினா அது மொக்கை.

பதில் சொல்லுங்க பாஸ்!

கடன் வாங்கிய நண்பனிடம்/ நண்பியிடம் எப்படிக் கேட்டால் பணம் திரும்பக் கிடைக்கும்? காமெடி ஐடியாக்கள் ப்ளீஸ்...

திலீபன்: அடுத்த வாரத்துக்குள்ள பணம் தரலைனா, என் சாவுக்குக் காரணம் நீதான்னு லெட்டர் எழுதி வெச்சிட்டு செத்துடுவேன்னு மிரட்டலாம்.

ப்ரீத்தி:
நீங்க கேள்வி மாத்திக் கேட்கிறீங்க. நண்பன் கொடுத்த கடன் திருப்பிக் கேட்க வந்தா, எப்படி டபாய்க்கிறதுனு கேளுங்க. அப்போ வரும் பதில். விஜய் மல்லையாவையே மிஞ்சிருவாய்ங்க.

குலாம் மொகைதீன்: இப்போதான் ஃப்ளெக்ஸ் கலாசாரமா போச்சே. அதையே ஃபாலோ பண்ண வேண்டியதுதான். எப்படின்னா...

நாள்: 09/08/2016. இடம்: வாங்குமிடம். “எனது நண்பன் மாரிமுத்து, போனவருடம் என்னிடம் வாங்கிய கடன் தொகை ஐநூறை, திருப்பித்தந்து ‘கடன்காரன்’ என்ற பட்டத்திலிருந்து விடுபடுகிறார் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதில் சொல்லுங்க பாஸ்!

பவானி: திருப்பித்தந்தா, அதைவிட இரண்டு பங்கு கடன் தர்றதா பொய் சொன்னா, கடன் வாங்கியாவது நம்ம கடனைக் கொடுத்துடுவான்ல.

மணிகண்டன்:
'மச்சி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விளையாட எனக்கு அழைப்பு வந்திருக்குடா, போகக் காசு இல்லைடா'னு சொன்னா போதும். நண்பா நான் தர்றேன்னு சொல்லிட மாட்டான்.

பத்மநாபன்:
வேற ஒரு மூதேவி கடன் வாங்கிட்டுத் தர மாட்டேங்கிறான்னு கண்டபடி திட்டிவிட்டு கடனை வசூலிக்க அவனிடமே ஐடியா கேட்கலாம்.

ராஜ்மோகன்: ‘அது என்னவோ தெரியல மச்சி. என்கிட்ட கடன் வாங்குறவன் எல்லாம் அல்ப ஆயுசுல விபத்துல செத்துப் போறான். நீயும் 2,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கே என்கிட்ட’னு பிட்டைப் போடணும்.

திலீபன்:
அது தெரியாமதான் பாஸ் முக்கால்வாசி பேரு இங்கே முழிச்சுட்டு இருக்கோம். நல்லவேளை நீங்களே கேட்டுட்டீங்க. இவங்க சொல்ற பதிலை வெச்சே பணத்தை வசூல் பண்ணிடணும். (என் பணம் கிடைச்சிடும்)

 ‘ஸ்மார்ட் போன் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் என்னவாகியிருக்கும்?’

பதில் சொல்லுங்க பாஸ்!

திலீபன்: தல-தளபதி சண்டைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்கும் சுகம் கிடைச்சிருக்காது. அவ்வ்வ்...

ராஜ்குமார்: கோணவாய் செல்ஃபிக்கள் தொல்லை இருந்திருக்காது.

ப்ரீத்தி:
யார் வீட்டுக்குப் போனாலும் சார்ஜ் போட பிளக் பாயின்ட் தேடாம இருந்திருப்பேன்.

சரண்யன் மணிவேல்:
பதிலை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பவும்னு டைம்பாஸ்ல கேள்வி கேட்டிருப்பீங்க. விடவா போறிங்க?

ரஹ்மத்துல்லா:
தாத்தா, பாட்டியைத் தேடிப் போய்க் கதைகளைக் கேட்டு இருப்போம்.