உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

மாஸ் படம் எடுப்பது எப்படி?

மாஸ் படம் எடுப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
மாஸ் படம் எடுப்பது எப்படி?

மாஸ் படம் எடுப்பது எப்படி?

மாஸ் படம் எடுப்பது எப்படி?

மாஸ் படங்கள் எடுக்கிறது ரொம்பவே ஈஸி... படிச்சுப் பாருங்களேன், உங்களுக்கே புரியும்!

* மாஸ் படம்னு மனசுல ரெஜிஸ்டர் செய்ய, இரண்டு அல்லது மூன்று எழுத்துகளில் டைட்டில் வைத்தால் போதும். ‘பாட்ஷா’, ‘கில்லி’, ‘வீரம்’... எப்படி நீங்களே பயப்படுறீங்க பார்த்தீங்களா... ஆனால், மூன்று எழுத்து என்பதற்காக இட்லி, சட்னினு எல்லாம் டைட்டில் வெச்சுடக் கூடாது சொல்லிப்புட்டேன்.

* ஹீரோ படத்தில் குறைஞ்சது ரெண்டு சட்டையாவது போட்டிருக் கணும். அதாவது பங்குனி வெயில் பல்லைக் காட்டி அடிச்சுட்டு இருக்கும்போதும் பனியனுக்கு மேல குறைஞ்சது ரெண்டு சட்டை போட்டுதான் திரியணும். இதுதான் மாஸ் ஹீரோவாக இருப்பதற்கான முதல் தகுதியும்கூட.

படத்தில் ஹீரோயினை ஒரு சீன்லகூட நடிக்க வெச்சுடக் கூடாது. மூணு ரொமான்ஸ் சீன், நாலு பாட்டுக்கு வேணும்னா ஆடவிடலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் தப்பித்தவறிக்கூட ஹீரோயினை நடிக்க வெச்சுடவே கூடாது.

மாஸ் படம் எடுப்பது எப்படி?

படத்துக்கு பன்ச் டயலாக் யோசிக்கிறது ரொம்பவே ஈஸி. காலையில் காலண்டரைக் கிழிச்சாலே போதும். அதிலிருக்கும் பழமொழிகளை பட்டி டிங்கரிங் பார்த்து ஒப்பேத்திடலாம். முக்கியமா அந்த டயலாக்கை படத்தில் குறைந்தபட்சம் மூன்று இடத்திலாவது பேசிடணும்.

இன்னும் ஒரு சிம்பிளான வழி இருக்கு. எந்த டயலாக்கா இருந்தாலும் அதைப் பந்தியில் பால்பாயசம் கிடைக்காதவன் மாதிரி சீரியஸான முகத்தோடு பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பேசினாலே போதும்.  உதாரணத்துக்கு, இதை முயற்சி பண்ணிப் பாருங்க, ‘என்கிட்ட அடங்கிப் போனா ஆட்டோவில் ஏத்திவிடுவேன், அதிகாரம் பண்ணா ஆம்புலன்ஸில் ஏத்திவிடுவேன்...’

படத்தில் எக்காரணத்தைக் கொண்டும் ஒரே இடத்தில் பத்து செகண்டுக்கு மேல் கேமரா இருக்கவே கூடாது. காலுக்கு கீழே, தலைக்கு மேலே, கண் பக்கத்தில், காது பக்கத்தில் என கேமராவை நொடிக்கு நொடி இடம் மாத்திக்கிட்டே இருக்கணும். ஒரு சீன் எடிட் பண்றதுக்குள்ள எடிட்டரை ஒரு பாக்கெட் சிகெரட் அடிக்க வெச்சுடணும்.

படத்தின் போஸ்டர் நல்லாவே இருந்திடக் கூடாது. பெரும்பாலும், ஹீரோ தன் கையில் துப்பாக்கி, குத்தீட்டி, கடப்பாரை என எதையாவது தூக்கிப் பிடித்து, நாக்கைக் கடித்து போஸ் கொடுக்க வேண்டும். அல்லது மூஞ்சியில் ரத்தக் காயங்களோடு ‘உம்’ என போஸ் கொடுத்திருந்தாலே போதுமானது.

-ப.சூரியராஜ்