உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

ஒரே மொக்கை!

ஒரே மொக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே மொக்கை!

ஒரே மொக்கை!

‘கோவம் வர்ற மாதிரி காமெடிப் பண்ணாதே’னு சந்தானம் சொல்றதுக்கு முன்னாடியே நமக்குப் பலபேர்கிட்ட சொல்ல நினைச்ச அனுபவங்கள் இருக்கும். அப்படி என்னைக் கடுப்பாக்கிய சில சம்பவங்களின் சரித்திரப் பதிவு இதோ...

ஒரே மொக்கை!

சைக்கிள்ல வேகமா போய்ட்டு இருக்கும்போது ‘தம்பி’னு கத்துவாய்ங்க. என்னமோ ஏதோன்னு திரும்பிப் பார்த்தா, வீல் சுத்துது பார்றான்னு சீரியஸா மூஞ்சியை வெச்சுக்குவாய்ங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த முரட்டு மொக்கைகளின் வரலாறு.

வீட்டில் படுத்துறாய்ங்கனு சங்கடப்பட்டுக்கிட்டே ஸ்கூட்டியில் சிலிண்டரை முன்னாடி வெச்சுக் கொண்டுவந்தா ‘என்னடா உங்க வண்டி மட்டும் கேஸ்ல ஓடும்போல...’ எனக் கலாய்ப்பார்கள்.

ல தலைமுறைக்கு முன்னாடி ஆரம்பிச்ச இன்னொரு கொடூரம். ‘என்னடா பண்றே?’னு யாராச்சும் கேட்டால், ‘சும்மா இருக்கேன்’னு சொல்லிடக் கூடாது. ‘சும்மா இருக்கிறதுக்கு கூச்சமா இல்லே?’ எனக் கேட்டு பயங்கரமான ஜோக் சொன்னதைப் போலக் கமுக்கமாகச் சிரிப்பார்கள்.

புதுச்சட்டை போட்டுருக்கிற ஆளைப்பார்த்து ‘தீபாவளிக்கு எடுத்த சட்டையா?’னு கேட்டா ‘இல்லைய்யா... எனக்கு எடுத்த சட்டை’னு சொல்லி எடக்கு மடக்காக சிரிப்பார்கள். போன தீவாளிக்கும் இதே மொக்கையைத்தானேய்யா போட்டே.

தோவொரு விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கிட்டு எக்குத்தப்பா மூணாவதா வந்து பரிசு வாங்கியிருப்போம். அதைச்சொன்னா, கலந்துக்கிட்டதே மூணு பேரான்னு கேட்டுக் கலங்க விடுவாய்ங்க.

‘மழையில் நனையாதேடா தம்பி’னு சொல்றதைப் பார்த்துப் பாசமா இருக்காய்ங்கனு நினைச்சு ஆர்வக்கோளாறுல ஃபீல் பண்ணிடக் கூடாது. ‘மண்டையில் இருக்கிற மண்ணாங்கட்டியெல்லாம் கரைஞ்சு ஓடுது பாரு’னு கம்பர் காலத்து லந்தைக் கொடுக்கிறதுக்காகவே, ஆள் கிடைக்காம பல பேர் ஊருக்குள்ளே சுத்திக்கிட்டு இருக்காய்ங்க!

- விக்கி