உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

இசை இங்கிட்டிருந்து வருது!

இசை இங்கிட்டிருந்து வருது!
பிரீமியம் ஸ்டோரி
News
இசை இங்கிட்டிருந்து வருது!

இசை இங்கிட்டிருந்து வருது!

ம்ம இசையமைப்பாளர்களோட சில டியூனையோ பி.ஜி.எம்-மையோ கேட்குறப்போ எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குறது எனக்கு மட்டும்தானா? அப்படிக் கேட்டுக் கண்டுபிடிச்சதில்...

நம்ம தேவா ‘பாட்ஷா’ படத்தில் ‘டெர்மினேட்டர்’ படத்தின் தீம் போட்டு அதிரவைத்தது மாணிக் பாட்ஷாவுக்கே வெளிச்சம்!

`மான் கராத்தே' படத்தில் ‘மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங் கூட்டுல’ பாட்டைக் கேட்கும்போது, அஜீத்தின் ‘வாலி’ படப் பாட்டு ‘நிலவைக் கொண்டு வா’ மாதிரியே இருக்குல்ல...! (உங்க கிருதாவும், என் கிருதாவும் ஒரே மாதிரி இருக்குல்ல!)

இசை இங்கிட்டிருந்து வருது!

உலக நாயகன் கயித்துல தொங்கிட்டே பாடுவாரே ‘கல்லை மட்டும் கண்டால்’. அந்த டியூனை அப்படியே விசில் சவுண்டாக மாற்றி ‘பூஜை’ படத்தில் ‘தேவதையைத் தேடி’ பாட்டில் போட்டிருப்பார் யுவன். இது இன்னொரு அவதாரம்!

நாம எல்லாம் உருகி உருகிக் கேட்ட இளையதளபதியோட ‘மின்னலைப் பிடித்து’ பாடல் டியூன் அப்படியே ‘Lord of the Dance’ என்ற ஆங்கில ஆல்பம் பாடலின் அட்டர் காப்பிதான் பாஸ்... அது போன மாசம் மொமென்ட்!

‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் அம்மா ஒவ்வொரு பெண்ணா ரிஜெக்ட் பண்ணப் பண்ண அவரோட நண்பர்கள் சிரிப்பாங்க பார்த்தீங்களா! அந்தக் காட்சியின் பின்னணி இசை ‘ஜெயம்’ ரவியோட ‘ஆதிபகவன்’ படப்பாட்டு ‘ஏ சலாம்’மில் முழு நீள இசையாக ஒலிக்கும். எங்கேர்ந்து எங்க போறாங்க பாரு!

‘சிங்கம்’ படத்தோட, ‘காதல் வந்தாலே, காலு ரெண்டும் தன்னாலே’ பாட்டு நம்ம தேவிபிரசாத்தே ‘வில்லு’ படத்தில் ‘வாடா மாப்புள.. வாழப்பழ தோப்புல’ பாட்டுக்குப் போட்டுருக்கார். கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்!

இசை இங்கிட்டிருந்து வருது!

‘என்றென்றும் புன்னகை’ படத்தின் ‘கடல் நான்தான்’ பாடலின் மூன்றாவது நிமிடத்தில் வரும் டியூனை அப்படியே ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘மழை வரப்போகுதே’யில் முதலில்

இசை இங்கிட்டிருந்து வருது!

ஒலிக்கவிட்டிருப்பார் ஹாரிஸ். இசையில இதெல்லாம் சகஜமப்பா!

‘பில்லா 2’ வில் வரும் ‘ஏதோ மயக்கம்’ பாடலின் நாதஸ்வர இசை, கத்தியின் ‘பக்கம் வந்து’ பாடலிலும் ஒலித்தது ஆச்சர்யம். தல Vs தளபதி.

‘ஆரண்ய காண்டம்’ படத்தில் போதைப்பொருள் இருக்கிற மஞ்சள்நிறப் பையைக் காட்டும்போது வரும் இசைக்கோவை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ வில் ‘கொஞ்சும் கிளி’ பாட்டில் முதலில் ஒலிக்கும் இசை. ஓஹோ உல்டாவா சொல்லிட்டேனா?

நம்ம ரஹ்மான் ‘127 Hours’ என்ற ஹாலிவுட் படத்தில் ‘உசுரே போகுதே’ டியூனை பின்னணி இசையாக அமைத்து தமிழை ஹாலிவுட்டுக்குச் சேர்த்துப் பெருமைப்படுத்தியுள்ளார் எனச் சொல்லிக்கொண்டு...

- ஜீ.கார்த்திகேயன்