
பாவத்த..!
ஃபேஸ்புக் வாட்ஸ்அப் டிவிட்டர்னு சோசியல் மீடியாவுல பண்ற அலப்பறைகளைக் கூடத் தாங்கிக்கலாம். அதை கிரியேட் பண்ணிக் கொடுத்த ஒரே குத்தத்துக்காக நம்மள வெச்சு வெச்சு செய்வாய்ங்க பாருங்க... வெறுப்புடா..!

• ஃபேஸ்புக்கை யூஸ் பண்ணுனா எவ்ளோ செலவாகும் மாசம்னு கேட்டா பரவாயில்ல... எனிடைம் இதுக்குள்ளயே இருக்காங்களே இதுல ஏதும் காசு கிடைக்குமானு முதல் பாலையே தலையில எறிவாய்ங்கே... இவ்வளவு நாளா எனக்கே இந்த யோசனை வந்தது இல்லையேடா!
• இந்தப் புள்ளைய தெரியும் மச்சி... எங்க ஏரியாதான்டா. அப்றம் ஏன் அக்சப்ட் பண்ணமாட்டேங்குதுனு நம்மகிட்ட வந்து கேப்பாய்ங்க. அது அக்சப்ட் பண்ணலைனா நான் என்னடா பண்ணுறது? அது கடைசியா ஃபேஸ்புக்குக்கு வந்தே மூணு மாசம் ஆகுதுனு ஆக்டிவிட்டி காட்டுது பாரு, அப்றம் எப்டி உடனே அக்ஸப்ட் பண்ணும்? ரொம்ப அர்ஜன்டுனா நீ நேரா போயிதான் சொல்லணும்.
• திடீர்னு பாதித் தூக்கத்துல நாம இருக்கும்போது கால்பண்ணி அக்கவுண்ட் லாகின் ஆகமாட்டேங்குது பாஸ்வேர்டு தப்பாம். நீதான ஓபன் பண்ணிக்குடுத்த? பாஸ்வேர்டு உனக்கு ஞாபகம் இருக்கானு கேப்பாய்ங்க. அதுக்காக ஒருமணிக்காடா கால் பண்ணுவ?!
• நான் நல்ல போஸ்ட்டா தான் போடுறேன். எனக்கு ஏன் லைக்கே போட மாட்டேன்றாய்ங்கனு கேப்பாங்க. அதை அவங்கள்ட்டயே கேளுனு விளையாட்டுக்கு சொன்னா... அதையும் ஸ்டேட்டசாவே போட்ருவாய்ங்க. எங்கிட்டோ தொலைஞ்சான் மகிழ்ச்சினு நாம நிம்மதியா இருந்தா அந்த ஸ்டேட்டஸுக்குக் கூட யாரும் லைக் போடலையே ஏன்னு கேப்பாய்ங்க.. அடேய்ய்ய்ய் ஏன்டா.!!! நீ நல்ல ஸ்டேட்டஸ்னு போடுற எல்லாமே தேவையில்லாத ஆணியாதான் இருந்திருக்கும்..
• ஃபேஸ்புக்கை விட டிவிட்டர் நல்லா இருக்குமாமே அப்டீய்யா? உனக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?னு கேட்டா காதுலயே கேக்காத மாதிரி இருந்துறணும்.. இல்லையினு வைங்க, கேப்பாங்க பாருங்க ஒரு கேள்வி.. “ஆமா இந்த டிவிட்டர் எப்டீ ஓபன் பண்ணுறது??” என்னாது மறுபடியும் மொதல்ல இருந்தா???
- ஜெ.வி.பிரவீன்குமார்