உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

டிபன் சாப்பிடுறீங்களா?

டிபன் சாப்பிடுறீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
டிபன் சாப்பிடுறீங்களா?

டிபன் சாப்பிடுறீங்களா?

டிபன் சாப்பிடுறீங்களா?

ன்னதான் விருந்தோம்பல் நம்ம பண்பாடுன்னாலும் எல்லாமே எந்திரமயமா மாறிட்ட இந்தக் காலத்தில் சில ஜாலியான சங்கடங்களும் நடக்கத்தான் செய்யுது.

• அங்கிளுக்கு ஹாய் சொல்லு, ஒரு ரைம்ஸ் பாடிக்காட்டு, மயில் எப்படி டான்ஸ் பண்ணும், குயில் எப்படி கூவும்னு குழந்தையை டார்ச்சர் பண்றது எல்லா வீட்லயும் நடக்கிற அட்ராசிட்டி. கெஸ்ட் முன்னாடி எப்படியும் அடிக்க மாட்டாங்கனு குழந்தை பதிலுக்கு சகட்டுமேனிக்கு குட்டிச்சாத்தான் வேலையெல்லாம் செஞ்சு ரிவெஞ்ச் எடுக்கும்.

• அப்பாவோட சொந்தம் வந்தா, ‘உடம்புக்கே முடியலை மதினி’னு உப்புமா ரெடி பண்ற அதே அம்மாதான்... தன்னோட தம்பி வந்தா நண்டு ரசம், சிக்கன் வறுவல் எல்லாம் பண்றதும். எல்லா அம்மாக்களுக்கு உள்ளேயும் எதிர்கால மாமியார் இருக்கத்தானே செய்றாங்க பாஸ்.

• முன்னாடிலாம் கெஸ்ட் யாராவது வீட்டுக்கு வந்தா, காபி, டீ ஏதாவது தந்து உபசரிக்கிறதுதான் நம்ம பழக்கம். இப்பல்லாம் WiFi பாஸ்வேர்ட் சேர்த்துத் தர்றதுதான் நல்ல உபசரிப்புக்கான இலக்கணமாகிடுச்சு. டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்.

டிபன் சாப்பிடுறீங்களா?

• அதே மாதிரி பத்திரிகை வைக்க வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்களுக்கு வம்படியா காபி தந்தே ஆகணும்கிறது என்ன கலாசாரமோ! இதுக்கு முன்னாடி பத்து வீட்டில் பல்லைக் கடிச்சிக்கிட்டு காபி சாப்பிட்டுட்டு வந்த அவங்க வயிற்றை ஹெவியா கலக்க வைக்கிறதில் அப்படியொரு சந்தோஷம்.

• வீட்டுக்கு வந்த கெஸ்ட் எதையாவது மறந்து வெச்சுட்டுப்போய் மறுபடி வீட்டுக்கு வந்து பார்த்தா, அவங்க வாங்கிட்டு வந்த ஸ்நாக்ஸ் பாக்கெட்லாம் பல்லை இளிச்சிக்கிட்டு நம்ம முன்னாடி திறந்து கிடக்கும். நம்ம மானம் காத்துல பறக்குற இனிமையான தருணம் அது.

• அவ்வளவு நேரம் வீட்ல `டாம் அண்ட் ஜெர்ரி' மாதிரி அடிச்சிக்கிட்டு இருந்தாலும் சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்துட்டா, சண்டையை பாஸ் பண்ணி பிரேக்விடுறது மட்டும் கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

•   பலவீனமான இதயம் இருக்கிறவங்க செய்யக்கூடாத விஷயத்துல ஒண்ணு பேச்சுலர் ரூமுக்கு கெஸ்ட்டா போய் தங்குறது. பெட்ஷீட்லேர்ந்து கட்டுற கைலி வரைக்கும் கடைசியா எப்போ தண்ணியில் நனைச்சாங்கனு அவங்களுக்கேத் தெரியாது. ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து மழையில்கூட தப்பித்தவறி நனையறதில்லை நம் ஆளுங்க!

- கருப்பு