உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

பவர் பாண்டிகள்!

பவர் பாண்டிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பவர் பாண்டிகள்!

பவர் பாண்டிகள்!

பவர் பாண்டிகள்!

கிராமத்துல கரன்ட் மட்டும் போச்சுனு வைங்க விதவிதமா பேச ஆரம்பிச்சுடுவாய்ங்க.

•   நல்ல கட்டத்துல நாடகம் ஓடிக்கிட்டு இருக்கு பத்து நிமிஷம் கழிச்சுக்  கட் பண்ணக்கூடாதுனு  கிழவிங்க கேட்க ஆரம்பிக்கும். லாரிக்காரன் கரண்ட் லைனை தட்டிவிட்டுட்டு போகும்போது `நாடகம் ஓடுதா?'னா பார்த்துக்கிட்டு இருப்பான்?

•    ஏதாவது எலெக் ஷன் ரிசல்ட் ஓடும்போது கரன்ட் கட் ஆச்்சுனா அம்புட்டுத்தேன். `தோத்தது தெரியக்கூடாதுனு  கட்சிக்காரங்களே காசு குடுத்து ஆப் பண்ணீட்டாங்கலாம்டி' னு இவங்களாவே காது கண்ணுலாம் வெச்சு அதுக்கு திரட்னிங், மஸ்காராலாம்  போட ஆரம்பிச்சுடுவாங்க.

• கரன்ட் கட்டாகி ரொம்ப நேரம் ஆச்சுனா எப்போ வரும்னு சொல்றதுக்கு ஊருக்குள்ள ஒருத்தன்  வெட்டியாவே சுத்திகிட்டு இருப்பான். அவன்கிட்டதான் எல்லொருமே கேட்ப்பாங்க..  ஏன்னா ஏரியா AEயோட  ஹெல்ப்பரோட  சித்தப்பா மகனோட மச்சினனின் ஃபிரண்டோட தம்பியின் நம்பர் இவர்கிட்டதான் இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா சர்க்காரோட நேரடி தொடர்பில் இருக்குறவர்.

பவர் பாண்டிகள்!
பவர் பாண்டிகள்!

• ரைஸ்மில்ல நெல் கொண்டு போய் போட்டுக்கிட்டு அரைக்கிறதுக்கு  உட்கார்ந்து இருக்குற குரூப்கிட்ட  சும்மானாச்சுக்கும், `ஏ ஆத்தா... இன்னிக்கு ஃபுல்லா கரன்ட் வராதாம்!'னு போற  போக்குல பீதியை கெளப்பி விட்டுட்டுப்போறதையே சில டிரவுசர் போட்ட பசங்க வேலையாவே வெச்சுருப்பாய்ங்க.

• கம்பத்துல ஏறி கரன்ட் கட் பண்ணுன அடுத்த நிமிஷம் அந்த மனுசன் காதை மூடிக்கணும்.... செத்துப்போன அவரோட பாட்டியில இருந்து அவரு வீட்டுல நிக்கிற ஸ்கூட்டி வரைக்கும் தோண்டி எடுத்து திட்டுவாய்ங்க.  அடேய் பாவம்டா..!

• திடீர்னு ராத்திரில கரன்ட் போச்சுனா திருடன் ஊருக்குள்ள வந்துட்டான்னு சொல்லி கதவைலாம் சாத்திக்கிட்டு பீரோவுக்கு பக்கத்துலயே போயி  ராத்திரி  முழுக்க படுத்துக்கிட்டு அதுக்குக் காவல் காத்துக்கிட்டு கிடக்குற சம்பவம்லாம்கூட நடந்திருக்கு பாஸு.  

• `அந்தக்காலத்துலலாம் என்ன கரன்டா இருந்துச்சு.. கரன்டு இல்லாமயும் வாழ பழகிக்கனும் மச்சி... ஆக்சுவலா எத்தியோப்பியாவுக்கு கிழக்கே ஒரு நாட்டுல பாத்தீங்கனா...'னு  சில அட்வைஸ் அனகோண்டாக்கள் வேற இடையில பாடம் எடுப்பாய்ங்க.  அடேய் இது இந்தியா!

 - ஜெ.வி.பிரவீன்குமார்