
`செல்'லாது செல்லாது!
கல்லூரிக்கு உள்ளே செல்போன் உபயோகப்படுத்தினால், பத்தாயிரம் ரூபாய் ஃபைன்னு சமீபத்தில் ஒரு காலேஜ்ல அறிவிச்சுருக்காங்க. கடைசியில் எங்கேயுமே செல்போன் யூஸ் பண்ணக் கூடாதுனு ஒரு ரூல்ஸ் வந்தா இந்த கேர்ள்ஸ்களுடைய நிலைமை!?

• செல்போனும் கையுமா... ஸாரி செல்போனும் காதுமா ‘சொல்லு... ம்ம்... அப்றம்... ஹ்ம்ம்... சொல்லு...’னு பெட்ல படுத்துப் புரள்கிற காலம் மலையேறித் திரும்ப டெடிபியரோடவோ நாய்க்குட்டியோடவோதான் அவங்களோட குட்நைட்டைக் கழிப்பாங்க.
• பல்லு இருந்தாதான் மாடு புல்லு திங்க முடியும்; செல் இருந்தாதான் பொண்னு செல்ஃபி எடுக்க முடியும்? (ரைமிங்கு!) லவ்வே பண்ணாதவனுக்கு எதுக்கு பிரேக்-அப்; செல்ஃபி எடுக்காத பொண்ணுக்கு எதுக்கு மேக்-அப்?னு பியூட்டிபார்லர் செலவும் குறையும். ஸ்கூட்டிக்குப் போடுற பெட்ரோல் செலவும் குறையும்.
• செல்போனை நோண்டிக்கிட்டே பூமாதேவியை மட்டுமே பார்த்துக்கிட்டு போயிட்டும் வந்துட்டும் இருந்த பொண்ணுங்களுக்கு அதுக்கப்புறம்தான் பக்கத்து வீட்டுலேயே ஃபகத்ஃபாசில் கலரில் பையன் இருக்கிறான்னே தெரியவரும்.
• லேண்ட்லைன் போன்ல இருந்து மிஸ்டு கால் பண்ணினா வீடு தேடி வந்து அடிப்பாய்ங்க. அதனால் மிஸ்டு கால்ங்கிற வார்த்தையே பொண்ணுங்க வாயில் இருந்து வழக்கொழிஞ்சுப் போயிருக்கும். பசங்களோட பாக்கெட் அமைதி, வளம், வளர்ச்சியாக இருக்கும்.

• ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் வந்தாலே, ‘உங்க நம்பர் கிடைக்குமா தோழி?, `அமெரிக்க அரசியல் குறித்து உங்ககிட்ட பேசணும்!', வாட்ஸ்அப் நம்பர் கொடுங்கள் சகோ, ஐரோப்பியப் பொருளாதாரம் பற்றிப் பேசணும்’ (ரெண்டும் ஒண்ணுதானேடா) னு கேட்டுத் தொல்லை பண்ண மாட்டாங்க.
• ஆமா இந்தப் பசங்க நிலைமை? பெருமாளே இல்லைங்கிறேன்; அப்பறம் பெருமாள் மகனுக்கு என்ன ஆனா என்ன? இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை, பேரரசு படத்துல பேய்க்கு என்ன வேலை? பொண்ணுங்களுக்கே செல்போன் இல்லைனா இந்தப் பையன்களுக்கு எதுக்குங்க செல்போனு?
- ஜெ.வி.பிரவீன்குமார்