உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

மோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை!

மோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை!
பிரீமியம் ஸ்டோரி
News
மோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை!

மோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை!

ம்ம பிரதமர் மோடிஜிக்கும் நம்ம ஆண்ட்ராய்டு போன் மோட்டோஜிக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னன்னு பார்ப்போமா மக்களே..? 

மோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை!

• மோட்டோ ஜி டபுள் சிம் கார்டு போடும் வசதி கொண்டது. மோடிஜியும் ஒரே நேரத்தில் ஜியோ சிம்கார்டுக்கு அம்பாஸிடராகவும், நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் பிரதமராகவும் டபுள் ரோல் செய்வார்!

• மோட்டோ ஜியில் ‘ஃப்ளைட் மோடு’ வசதி உண்டு. மோடிஜியும் அடிக்கடி ஃப்ளைட் மோடுக்குச் செல்வார் என்பதை இந்தியாவே அறியும்!

• ஐபோன் மாடல் போல செம டிஸ்ப்ளே கொண்டிருப்பதால் மோட்டோஜியை பார்த்தவுடனே பிடிக்கும். ஹைபிராண்டு மாடல் போல அம்சமான காஸ்ட்யூம் போட்டு வெளிநாடுகளில் வலம் வருவதால் இவரை பார்க்கப் பார்க்க எல்லோருக்கும் பிடித்துவிடும்!

• கேமரா மட்டும் மற்ற பிராண்டுகள் போல இல்லாமல் சற்று தொங்கலாக இருப்பது மட்டும் மோட்டோஜியின் குறை! வந்த வேலையைக்கூட மறந்து கேமராவைப் பார்த்தால் உற்சாகமாக செல்ஃபிக்களை எடுத்துக்குவிப்பது மட்டுமே குறை!

• மோட்டோஜி பேட்டரி மற்ற போன்களைவிட அதிக நேரம் நின்னு பேசும். மோடிஜி மற்ற பிரதமர்களைவிட அதிக நேரம் உற்சாகமாக மேடைகளில் சார்ஜ் குறையாமல் நின்னு பேசுவார்!

• மோட்டோஜியில் 4 ஜி வரை அப்டேட்டாக பல வெர்ஷன்களில் வந்துள்ளது. மோடிஜியும் `ஜியோ-4ஜி’ சிம்கார்டு விளம்பரத்தில் நடித்து அப்டேட்டாக இருக்கிறார்.

• மோட்டோ ஜி  உள்நாட்டில் அதிகம் வியாபாரமாகும் ஒரு அந்நியநாட்டு நிறுவனம்! மோடிஜி வெளிநாட்டில் அதிகமாக  இருக்கும் ஒரு உள்நாட்டு பிரதமர்!

- சரண்ஜி