உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

சாவடி ராப்பு!

சாவடி ராப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
சாவடி ராப்பு!

சாவடி ராப்பு!

சாவடி ராப்பு!

வெள்ளக்காரன் ரிமோட் கண்டுபிடிச்சா, தட்டியே ரிமோட்டை வேலை செய்ய வைக்கிறதைக் கண்டுபிடிச்சது தமிழன். அந்த மாதிரிதான் ஹிப் ஹாப் கலாசாரம் வெளிநாட்டில் தோன்றினாலும், ‘ராப்’ இசையை நம் ஆளுங்க மண் மணம் மாறாம நம்ம ஊருக்கு ஏற்றபடி எக்குத்தப்பா மாத்திட்டு வர்றாங்க. அதில் என்னவெல்லாம் அலப்பறைகள் பண்றாங்கனா...

• பொதுவாவே ராப் பாடல்கள்ல வர்றவங்க தொப்பியைத் திருப்பிப் போடுறது வாட்ச்சைக் கழுத்துல கட்டுறதுனு எல்லாமே கோணல்மாணலா செய்வாங்கங்கிறது உலகம் முழுக்க இருக்கிற ஒரு விதி. நம் ஆளுங்க உள்ளூருக்கு ஏற்ற மாதிரி டவுசரை மாட்டிக்கிட்டு முருகன் டாலர்களைத் தொங்கவிட்டு கெட்டப் சேஞ்ச் பண்ணி டெர்ரர் காட்டுறாங்க. ஆனா ஒண்ணு... இந்த கெட்டப்ல ரோட்ல சுத்துனா நாய்க்கடி வாங்கறது உறுதி.

சாவடி ராப்பு!

• ‘ராப்’ பாடகராகணும்னா முதல்ல டி.ஜே.யா இருந்துட்டு வந்திருக்கணும் போல. ஏன்னா எல்லோருமே டிஸ்க்கைத் தேய்க்கிற மாதிரி காத்துல கைய வெச்சுத் தேய்ப்பாங்க. எம்.ஜி.ஆர். மாதிரி உங்க கை அங்கிட்டும் இங்கிட்டும் அசைச்சுக்கிட்டே இருக்கணும். ஒரே இடத்துல நிற்கக் கூடாது. கேமரா கிட்டத்துல க்ளோஸப்ல முகத்தைக்காட்டி பயம் காட்டணும். இப்படிச் சில பொதுவான மேனரிஸங்களை நம் ஆளுங்களும் அப்படியே ஃபாலோ பண்றாங்க.

• பாரீன்ல பாட்டுக்கு நடுவுல மூச்சுவிடாம இங்கிலீஷ்ல பேசினா... நம் ஆளுங்க தமிழ்தானான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பேசி வெறுப்பேத்துறாங்க. காமாட்சி நல்லாருக்கியா... வீட்ல அப்பாம்மா சவுக்கியமாங்கிறதை இடைவெளியே இல்லாம எழுதியிருந்தா, எப்படியிருக்குமோ அப்படி வாசிச்சு பயம் காட்டுறாங்க.

• `அன்பே', `ஆருயிரே'னு காதலியை வர்ணிக்கிற கெட்டபழக்கம் இந்த வகைப் பாடல்களில் கண்டிப்பாகக் கிடையாது. முரட்டுத்தனமான வார்த்தைகளில் வன்முறையா முறைக்கிறதுதான் ‘ராப்’ கலாசாரத்தின் முக்கியத்தகுதியே! அதனால் சாவடிப்பேன்கிறதைக்கூட டீ குடிப்பேங்கிற மாதிரி சகஜமா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?

• கால்ல கட்டெறும்பு கடிச்ச மாதிரி நடு நடுவில் கத்தினாதான் பாட்டு ஹிட் அடிக்கும்கிறது காலம் காலமா நம்பப்படுற விதி. பாட்டு எவ்வளவு ஸ்மூத்தா போனாலும் நடு நடுவில் நாலஞ்சு பேரை விட்டுக் கத்த வெச்சுக்கிட்டே இருக்காங்க. பஞ்சு பாடியெல்லாம் தாங்காதுய்யா... பரலோகம்தான்!

• காதலி பேர் குப்பம்மாவா இருந்தாலும் பேபி, ஸ்வீட்டி போன்ற பொதுப்பெயர்களில் செல்லம் கொஞ்சித்தான் பாடணும். ஆமா சொல்லிப்புட்டேன். ஆனா அடுத்த லைன்லேயே அவங்களைக் கண்டபடி திட்டறது ராப் கலாசாரத்தில் ஜகஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

- கருப்பு