உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

பதில் சொல்லுங்க பாஸ்!

‘கபாலி படத்தில் கமல் நடித்திருந்தால் சீன்ஸ் எப்படி மாறியிருக்கும்?

சண்முகசுந்தரம்: ரஜினி ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி வெளியே வரும்போது குமுதவள்ளி போட்டோவை ஆசையா தடவுவாரு... கமல் நடிச்சிருந்தா முத்தம் கொடுத்துருப்பாரு.

ரஃபீக்: ரஜினி, தினேஷ், டோனி லீ, ஜான், ஜானி, ராதிகா ஆப்தே, கிஷோர், தன்சிகான்னு படத்தில் நடிச்ச பாதி கேரக்டர்களை கமலே பண்ணி 13 கெட்டப் போட்டிருப்பார்.

ஸ்ரீனிவாசன்: படம் இன்னும் நல்லா ஓடியிருக்கும். ஏன்னா படம் புரியணும்னு ஒவ்வொருத்தரும் நாலைஞ்சு தடவையாவது பார்த்திருப்பாங்க.

தங்கசரவணன்: நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லலை. சொன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்னு சகட்டுமேனிக்கு வசனம் பேசி, ரசிகர்களைக் குழப்பியிருப்பார்.

அட்டகத்தி தினேஷ்: அந்தப் பறவையை ஏன் கூண்டுல அடைக்குறே? அதுக்குக் குழம்பு குண்டான்ல போட்டின்னா நாலு பேருக்கு உதவுமுல்ல... நாலுபேரு நாக்கு ருசிக்க சாப்பிடணும்னா பறவையைக் குழம்பு வைக்கிறதுல தப்பே இல்லைனு பேசி படத்தை ரிலீஸ் பண்ணவிடாம தடை போட வெச்சுருப்பார்.

கண்ணன்: ரெளடி பாதி ஹீரோ பாதி கலந்து செய்த கலவை நான் என டோனி லீயிடம் சவால் விட்டிருப்பார்.

பதில் சொல்லுங்க பாஸ்!

 குழந்தைகள் செய்யும் சேட்டைகளைக் குறைக்க ஜாலியான ஐடியாக்கள் ப்ளீஸ்...

விவேக் ஆனந்த்: சேட்டைக்குத் தீனி போடும் டி.வி நிகழ்ச்சிகளான ‘WWE’, ‘அச்சம் தவிர்’, ‘தமிழக சட்டசபை!’ போன்ற விஷயங்களைக் காட்டாமல் இருந்தால் உத்தமம்.

காளி தமிழ்: இதற்குப் பதில் டைப் பண்றதுக்குள்ள ரெண்டு தடவை போனைப் புடுங்கிட்டு ஓடிட்டாய்ங்க... கெஞ்சத்தான் முடியும். ஏன்னா டிசைன் அப்படி.

சிலம்பரசன்: சேட்டை பண்ற பசங்ககிட்ட, நீ அதிகமா சேட்டை பண்ணுனா கடைசியில் உனக்கு உன் அம்மா மாதிரி ஒரு பொண்ணுதான் கேர்ள் ஃப்ரெண்டா கிடைப்பானு சொல்லிப் பாருங்க... பயந்து அடங்கிப்போயிடுவாங்க, அவங்க அப்பா மாதிரி!

ப்ரீத்தி விவேக்: குழந்தைங்க சேட்டை எல்லாம், அஜீத், விஜய் ரசிகர்கள் போட்டுக்கிற சண்டை மாதிரி. தினமும் அதிகரிச்சிட்டுதான் இருக்கும். குறைக்கவெல்லாம் முடியாது.

ராஜ்மோகன்:
குழந்தைகளின் இயல்பே சேட்டை பண்றதுதான். அதுங்களை சேட்டை பண்ண விடு. பண்ணறதும் பண்ணாததும் அவங்க இஷ்டம்! உன்னோட இந்த அடக்குமுறை அவங்க சேட்டையைவிட மோசமானது!

பதில் சொல்லுங்க பாஸ்!

 பொண்ணுங்க பண்ற எந்த அட்ராசிட்டி பசங்களுக்கு எரிச்சல் தருகிறது?

இம்ரான்: ஒன்றா ரெண்டா எரிச்சல்கள்... எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா...? (ஓ பாட்டாவே படிச்சுட்டியா.. இடையில இடையில பேய், பிசாசு, பத்ரகாளி சேர்த்துக்கோ!)

ஜம்புலிங்கம்: கிருத்திகைக்கு காக்காக்கு வைக்கிற அளவுக்கு சின்ன டப்பாவில் சாப்பாடு கொண்டு வந்துட்டு அரைமணி நேரமா பந்தா பண்ணிட்டே சாப்பிடுவாங்க பாருங்க, அப்படியே அந்தக் கையளவு சோத்தையும் ஓரேடியா வாய்ல திணிச்சுடலாமானு எரிச்சல் வரும்.

மாணிக்: நாம மணிக்கணக்கா டைப் பண்ணி மெசேஜ் அனுப்பினா... ஒரே வார்த்தைல ‘ம்’ வருமே. அதான் அட்ராசிட்டி அம்மணீஸ்.

ரகுராம்: எந்த அட்ராசிட்டியைச் சொல்றதுனு நெனச்சாலே எரிச்சலாக வருகிறது மன்னா!

முத்துராஜ்:
மூஞ்சி கழுவாம செல்ஃபி எடுத்துப் போடுறதில் இருந்து முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி ஸ்கூட்டி ஓட்டுற வரையும் எல்லாமே கடுப்புதான்.

பதில் சொல்லுங்க பாஸ்!

 ‘காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது’ எனும் அறிவிப்பைக் கேட்டதும் உங்கள் மனதில் தோன்றியது என்ன?

கார்த்திக்: கேட்காத காதுக்கு ஹெட்செட்டு, பாயாசம் குடிக்க எதுக்கு பல் செட்டு!

ப்ரீத்தி விவேக்: ஆணியே புடுங்க வேணாம்... நீங்க புடுங்கறது பூராவும் தேவையில்லாத ஆணிதான்.

வால்டர் ராபின்சன்: நடிகர் சங்கம்- காவிரி பிரச்னையா? ப்ளீஸ் எல்லோரும் அந்தப் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க. திருட்டு வி.சி.டி-ல பார்க்காதீங்க.

இன்பா செல்வம்: அவங்க சங்கத்துப் பஞ்சாயத்தே இன்னும் முடியாம இழுத்துக்கிட்டிருக்கு. இதில் இது வேறையா?

உதயா செந்தில்: ‘அப்படியே நீங்க செஞ்சுட்டாலும் நாங்க அசந்துதான் போய்ருவோம்’ ங்கிற டயலாக்தான் தோணுச்சு.

சண்முக சுந்தரம்:
விவசாயிகள் பிரச்னை எல்லாம் அவங்களுக்கு எங்கே தெரியப் போகுது? எங்கேயாவது உள்ள தெருநாயைத் தூக்கிக்கிட்டு பாசக்காரப் பய புள்ளைக மாதிரி போஸ் கொடுக்கத்தான் தெரியும்.