உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

வாழ்க்கைனா இன்னா..?

வாழ்க்கைனா இன்னா..?
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கைனா இன்னா..?

வாழ்க்கைனா இன்னா..?

‘வாழ்க்கைனா என்னான்னு தெரியுமா...?’ என வருவோர் போவோரெல்லாம் தனக்கு நேர்ந்த சம்பவங்களை அடிப்படையாக வெச்சு வாய்க்கு வந்ததைக் கிளப்பி விடுவாய்ங்க. அதைக் கேட்டு ‘இந்தாளு பெரிய தத்துவஞானியா இருப்பார் போல...’ என வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்காமல் நாமளும் ‘வாழ்க்கை என்பது...’னு ஆரம்பிக்கப் பழகிக்கணும். அப்படி நான் கேட்ட சில வாழ்க்கைத் தத்துவங்கள்(?)தான் இவை...

வாழ்க்கைனா இன்னா..?

• வாழ்க்கை ஒரு கூலிங் பீர் மாதிரி. கிடைக்கிறப்போ வாங்கிக் குடிச்சுக்கணும். வாழ்க்கையில் கொஞ்சம் தாமதிச்சாலும் நமக்கு முன்னாடி இருக்கிறவன் கடைசி பீரையும் வாங்கிட்டுப் போயிருவான். #பத்துமணிக்குத் தோணினது போல!

• வாழ்க்கை என்பது பேய் மாதிரி. கண்ணால பார்க்கவும் முடியாது. பயப்படாம இருக்கவும் முடியாது. #இப்போதான் கல்யாணம் ஆகியிருக்குமோ?

• வாழ்க்கை என்பது பொண்ணுங்க ஓட்டுற ஸ்கூட்டி மாதிரி. எப்போ, எங்கிட்டு இண்டிகேட்டர் போட்டு எந்தப் பக்கம் திரும்பும்னே தெரியாது. #எந்த சிக்னல்ல விழுந்தாரோ?

• வாழ்க்கை என்பது டவுன் பஸ் ஜன்னல் மாதிரி. காற்று வராதப்போ திறக்க முடியாது. மழை பெய்யறப்போ மூட முடியாது. #என்ன கொடுமை சரவணா?

• வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை மாதிரி. பக்கத்தில் இருக்கிறவன் நம்மைப் பார்த்து காப்பியடிச்சுட்டு நாம பார்க்கும்போது பேப்பரை மறைச்சுக்குவான். அதனால, நாமளே புதுசா வாழக் கத்துக்கணும். #பார்டர்லயாச்சும் பாஸாகிடணும்!

• வாழ்க்கை என்பது வெள்ளைப் பேப்பர் மாதிரி. வேறு யாராவது எடுத்துக் கிறுக்கி விளையாடுறதுக்குள்ள நாமளே அழகா நிரப்பிடணும். #ஆமா.. இவரு பெரிய டாவின்ஸி!

• வாழ்க்கை என்பது மெட்ராஸ்ல ஓடுற ஆட்டோ மாதிரி. சந்து பொந்துக்குள்ளேயெல்லாம் புகுந்து வீலிங் பண்ணியாச்சும் கரெக்டான இடத்தில் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்த்திடும். #பாயின்ட் வரட்டும். பாயின்ட் வரட்டும்.

• வாழ்க்கை என்பது பட்டாம்பூச்சி மாதிரி. யார் கையிலேயும் சிக்காமல் பறந்துக்கிட்டே இருக்கணும். சிக்கிட்டா தேய்ச்சுத் தேய்ச்சே இறக்கையை ஒடிச்சுருவாய்ங்க. #கவித!

• வாழ்க்கை என்பது டயர் மாதிரி. வண்டி ஓட ஓட டயர் தேய்ஞ்சு போகும். அதே மாதிரி நாட்கள் போகப்போக வாழ்க்கையும் தேய்ஞ்சு போயிரும். #அடங்கப்பா சாமி!

• வாழ்க்கை என்பது... அட இந்த மாதிரிதான். எவன் எதை வேணும்னாலும் சொல்லுவான். அதையெல்லாம் கண்டுக்காம க்ராஸ் பண்ணிப் போய்க்கிட்டே இருக்கணும்.

- விக்கி