கலாய்
Published:Updated:

இது கிரிக்கெட் காமெடி!

இது கிரிக்கெட் காமெடி!
பிரீமியம் ஸ்டோரி
News
இது கிரிக்கெட் காமெடி!

இது கிரிக்கெட் காமெடி!

இது கிரிக்கெட் காமெடி!

ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டில் எத்தனையோ பேர் சரித்திர நாயகர்களாக ஜொலித்தி ருக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த விளையாட்டில் சில காமெடியான விக்கெட்களும் விழுந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கொசுவர்த்தி சுத்தி ஃப்ளாஷ்பேக்கில் பார்ப்போமா!

• ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பது கட்டங்களும் உச்சத்தில் இருந்தால் மட்டும்தான் மோசமான ரன்-அவுட்(கள்), ஹிட் விக்கெட், ஃபீல்டருக்கு இடையூறு செய்ததற்காக விக்கெட் எல்லாம் ஆகமுடியும். அந்த மாபெரும் மனிதர் இன்சமாம் தான். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இன்சமாம் ஷாட் அடித்துவிட்டு நிலைகுலைந்து ஸ்டம்ப் பக்கம் போய் பேட்டை வைத்து முட்டுக்கொடுப்பார். சின்னதாய் ஒரு குட்டிக்கரணம் அடித்தும் பலனின்றி ஹிட் விக்கெட் ஆகி வெளியேறுவார். பாவத்த!

இது கிரிக்கெட் காமெடி!

• 2005ம் ஆண்டு ஆஷஷ் தொடரின் போது ஸ்பின் மன்னன் ஷேன் வார்னே இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ்க்கு பந்து வீசுவார். மைதானத்தின் ஒரு மூலையில் இருந்த, நாள் முழுக்க பந்துவீசி சேதமடைந்த பகுதியில் பட்டு போல்ட் தெறிக்கும். என்ன நடந்தது என்பது தெரியாமல் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் முழிப்பார். தற்போது வரை மிகச்சிறந்த மேஜிக் பந்தாக இது கருதப்படுகிறது.

• 2007ம் ஆண்டு டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த மிஸ்பா உல் ஹக் ஒரு ரன் எடுப்பதற்காக பந்தை தட்டிவிட்டுச் செல்வார். தினேஷ் கார்த்திக் பந்தை வேகமாக எறிய... அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள மிஸ்பா எம்பிக் குதிப்பார். மிஸ்பாவின் கெட்ட நேரம் போல... எம்பிக்குதித்த கேப்பில், பந்து ஸ்டம்பில் பட்டு ரன் அவுட்டாகி வெளியேறுவார்.

• மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நியூசிலாந்து வீரர் ரோஞ்சி ஆக்ரோசமாக ஒரு பந்தை விளாச... பந்தும் பவுண்டரிக்குச் சென்றது. பந்து போன திசையில் கேமரா பவுண்டரி லைன் வரை போய் திரும்பி வந்தால் மே.இ. வீரர்கள் குதூகலமாக விக்கெட்டை செலிப்ரேட் செய்வார்கள். அடிச்சது ஃபோர் தான். ஆனா ரோஞ்சி தன்னோட காலைக் கொஞ்சம் பின்னால் நகர்த்தியதில் ஹிட் விக்கெட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டிருப்பார்.

இது கிரிக்கெட் காமெடி!

• நியூசிலாந்துக்கு எதிராக சங்கக்கரா இரண்டு ரன்கள் ஓடித் தனது சதத்தை நிறைவு செய்வார். பேட்டைத் தூக்கி செலிப்ரேட் செய்யும்போது எதிர்ப்பக்கம் முத்தையா முரளிதரன் ரன் அவுட். அதுவும் எப்படி... சதமடிச்ச கேப்டனை வாழ்த்துறதுக்காக ரன் ஓடுன வேகத்துல திரும்ப வந்த மனுசனை ரன்-அவுட் ஆக்கி வெளிய அனுப்புவாய்ங்க. இதே சங்கக்கரா இந்தியாவுக்கு எதிராக பேட் செய்யும்போது, அடித்த வேகத்தில் பேலன்ஸ் இன்றி பேட் மட்டும் தனியாகச் சுழன்று ஸ்டம்ப் மீது பட்டு ஹிட் விக்கெட் ஆனது.

- கருப்பு